பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் மகப்பேறு விடுப்பு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு
டெல்லி: பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு எனமத்திய அரசு அறிவித்துள்ளது. இம்மாதிரியான இறப்புகள் தாயின் வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய பணியாளர் நலன் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது.இதன்படி குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின்னர் சிறிதுநேரத்தில் குழந்தை இறந்துவிட்டாலோ இந்த விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பெண் ஊழியர்கள் இந்த உத்தரவின்படி இனி பணிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசவகால விடுப்பு
பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆனால், இந்த விடுப்பை பெறுவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. ஆனால் இவ்வாறு பிரசவ கால விடுப்பு கிடைக்கப்பெற்றாலும்,
பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிடும் காலத்தில் இந்த விடுப்பு பொருந்துமா என்கிற கேள்வி நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குழந்தை இறந்துவிட்டாலும் விடுப்பு
மத்திய பணியாளர் நலன் பயிற்சி துறைக்கு தொடர்ந்து பிரசவ கால விடுப்பு,
பிரசவத்தின்போது குழந்தை இறந்து விடும்போது எடுக்கப்படும் விடுப்புகள் குறித்து ஏராளமான கேள்விகள் வந்தவண்ணமுள்ளன. இந்நிலையில், பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என மத்திய பணியாளர் நலன் பயிற்சி துறை உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும் பிரசவத்திற்கு பின்னர் சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்து விட்டாலும் இந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாட்கள்
இது தொடர்பான உத்தரவில், "இந்த விவகாரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து பரிசீலிக்கப்பட்டது. தாயின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழந்தை பிறந்த உடனேயே இறப்பு, அல்லதுஉயிரிழந்து பிறப்பது, இறப்பு காரணமாக ஏற்படக்கூடிய உணர்ச்சி அதிர்ச்சி
ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெண் மத்திய அரசு ஊழியருக்கு 60 நாட்கள்சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

காலக்கெடு
மேலும், பெண் மத்திய அரசு ஊழியர் ஏற்கெனவே மகப்பேறு விடுப்பு
எடுத்திருக்கும் நிலையில் அவரின் விடுப்பு காலம் முடிவடையும் தறுவாயில்
உள்ள நிலையில் அவரின் குழந்தை உயிரிழக்கும்பட்சத்தில் அதற்கான மருத்துவ
சான்றிதழ்கள் கேட்டு காலம் கடத்தாமல் உடனேயே அவருக்கு 60 நாட்கள் சிறப்பு
மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
இதில் காலக்கெடு உள்ளது. அதாவது குழந்தை 28 நாட்களுக்கு உயிரிழந்தால்
மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.

விதிகள்
அதேபோல இந்த சலுகைகள் இரண்டு குழந்தைகளுக்கு குறைவான குழந்தைகள் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிரசவம் நடந்திருந்தால் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை என்பது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின்(CGHS) கீழ் இணைக்கப்பட்ட அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை எனவரையறுக்கப்படுகிறது. எம்பேனல் இல்லாத தனியார் மருத்துவமனையில் அவசரக்கால பிரசவம் நடந்தால், அவசரச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என, DoPT உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
நாடு முழுவதும் அரசு துறைகள் மெல்ல பலவீனமடைந்து வரும் நிலையில், மத்திய அரசில் வேலை வாய்ப்பு என்பது எட்டா கணியாகவே பலபேருக்கு இருக்கிறது. மத்திய அரசின் பனிகளுக்கு விண்ணப்பிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தேவையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே இந்த சலுகைகளை தனியார் நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications