சிறகடிக்க ஆசையில் கதையே மாறிப்போச்சு! விஜயாவை விரட்டிவிட்ட மனோஜ்.. வீடு விஷயத்தில் முத்துக்கு கிடைத்த உதவி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2026 மே 15ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயாவிற்க்கு மனோஜ் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் மீனா வீட்டிற்கு விஜயா போயிருக்கிறார். ஆனாலும் அவருடைய திமிர் மட்டும் அடங்கவே இல்லை. அதே நேரத்தில் முத்துக்கு ஒரு எதிர்பாராத உதவி கிடைக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டிற்கு போன விஜயா அங்கே இருக்க முடியாமல் மனோஜ் ஷோரூமில் வந்து உட்கார்ந்து இருக்கிறார். அதனால் அண்ணாமலையே நேராக மனோஜ் ஷோரூமிற்கு போய் விஜயாவை கூப்பிடுகிறார். விஜயா முதலில் வரமாட்டேன் என மறுத்தாலும், பின்னர் மனோஜும் இங்கு நீங்கள் இருந்தால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இங்கு உங்களுக்கு போதிய வசதி இல்லை. அதுமட்டுமில்லாமல் கடையையும் திறக்க முடியவில்லை என சொன்னதை அடுத்து விஜயா மனம் மாறுகிறார். பின்னர் மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்ல சம்மதம் தெரிவிக்கிறார்.
சீரியல் ரிவ்யூ
முத்துவும், மீனாவும் விஜயாவை கூட்டிக்கொண்டு கொண்டு மீனாவின் அம்மா வீட்டிற்கு போகின்றனர். அங்கு போனதும் வழக்கம்போல் விஜயா தன்னுடைய திமிர்தனத்தை காட்டுகிறார். எனக்கு இங்க வர விருப்பம் இல்லை. இவங்க எல்லாரும் சொன்னதுனால தான் நான் இங்க வந்தேன் என சொல்கிறார்.
அப்போது முத்து நீங்க இங்க நிம்மதியா இருக்கலாம் மம்மி என சொன்னதும். நீ என்னடா புதுசா மம்மினுலாம் கூப்பிடுற என விஜயா கேட்க, அப்போது முத்துவும், மீனாவும் தாங்கள் இருவரும் ஸ்போகன் இங்கிலீஷ் கிளாசுக்கு போவதை பற்றி சொல்கின்றனர். அதற்கு விஜயா இனி நீங்க படிச்சு என்னத்த கிழிக்க போறீங்க? என்று திமிராக கேட்க, அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
இதையடுத்து ஸ்ருதியும், ரவியும் அங்கு வர, அப்போது ஸ்ருதி, தன்னுடைய அம்மா அப்படி செய்ததற்காக தான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என விஜயாவிடம் சொல்கிறார். மன்னிப்பு கேக்குற அளவுக்கு என்னதான் நடந்துச்சு என அண்ணாமலை கேட்க, முத்து எல்லா விஷயத்தையும் போட்டு உடைக்கிறார். இதைக்கேட்டதும் மீனாவின் அம்மா, சம்மந்தி வயசுல எவ்வளவு பெரியவங்க, அவங்களை இப்படி பண்ணலாமா என கேட்கிறார். இதையடுத்து முத்துவும், மீனாவும் கிளம்பி ஸ்போகன் இங்கிலிஷ் கிளாசுக்கு செல்கிறார்கள்.
அங்கு தான் முத்துவுக்கு ஒரு நண்பர் கிடைக்கிறார். அவர் முத்துவின் வீட்டு பிரச்சனையை பற்றி கேட்டு தெரிந்துகொண்டு, நான் உங்களுக்கு உதவுகிறேன் என சொல்கிறார். அப்படி நீங்க என்ன வேலை பாக்குறீங்க என முத்து கேட்க, நான் வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறேன் என சொல்கிறார். அதைக்கேட்டதும் ஷாக் ஆன முத்து, அப்போ என் வீட்டை மீட்டு கொடுத்திருவீங்களா சார்? என கேட்க, அவரும், அந்த பைனான்சியரை நேரில் போய் பார்த்து பேசுவோம் என சொல்லி இருக்கிறார்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications