Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரகசிய தகவல்கள் பரவும் வழியை கண்டுபிடித்த ராணுவம்! மத்திய அரசு அதிரடி.. 14 மெசேஞ்சர்கள் முடக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் பயன்படுத்திய 14 மொபைல் மெசேஞ்சர்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை முடக்கும் முயற்சியில் இது முக்கியமான நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிந்ததிலிருந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வருவதால் பாகிஸ்தான் புதிய யுத்தியை கையாண்டு வருகிறது. அதாவது தங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட பயங்கரவாத இயக்கங்களை பயிற்றுவித்து அதனை இந்தியாவுக்குள் ஊடுருவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

The central government has blocked 14 mobile messenger apps that were involved in terrorist activities

இந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் இந்திய ராணுவம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பயங்கரவாதிகளின் ஊடுவுருவலை சமாளிப்பது சவாலானதாக இருக்கிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு எப்படி உருவாகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஜம்முவில் உள்ள இளைஞர்களுடன் பேசவும், அவர்களை தங்களது ஆதரவாளர்களாக மாற்றவும் பயங்கரவாதிகள் பல்வேறு வித்தியாசமான மெசேஞ்சர்களை பயன்படுத்துகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த செயலிகள் எதுவும் இந்தியாவை சேர்ந்தது கிடையாது. அதேபோல இந்த செயலியை தயாரித்தவர்கள் குறித்தும் எவ்வித தகவல்களும் சரியாக இல்லை. எனவே இதனை முடக்குவதுதான் சரியானது என்று ராணுவம் முடிவெடுத்தது. இதனை பரிந்துரையாக மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தது. இதனையடுத்து ராணுவம் பரிந்துரைத்த 14 மெசேஜ் ஆப்கள் தற்போது முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்த மெசேஞ்சரில் பரிமாறப்பட்ட தகவல்களையும் ராணுவம் சேகரித்திருக்கிறது.

இதனையடுத்து Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema, Crypviser, Enigma and Safeswiss போன்ற மெசேஞ்சர்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் மொத்தம் 15 ஆப்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 15வது ஆப் இந்தியாவின் ஒரு முன்னணி ஆப் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த ஆப்-ஐ பயன்படுத்தியவர்கள் குறித்த சரியான ஆதாரம் இல்லாததால் தற்போது இந்த ஆப் தவிர மற்ற அனைத்து ஆப்களுக்கும் மத்திய அரசு தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 69A-ன் கீழ் தடை விதித்துள்ளது. இது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, "ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க இந்த மெசேஞ்சர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

The central government has blocked 14 mobile messenger apps that were involved in terrorist activities

இந்த ஆப்களின் சிறப்பம்சம் என்னவெனில் இதில் தொடர்புகொண்டு பேசுபவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. யாரோ ஒருவர் எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டு இது போன்று பேசிக்கொண்டிருப்பார்கள். இதனை தணிக்கை செய்யவும், ஒட்டுக்கேட்வும் கூட நம்மால் முடியாது. எனவேதான் அவர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே நாட்டின் இறையான்மைக்கு ஊறு விளைவிப்பதாக கூறி சீன நாட்டின் அப்ளிகேஷன்களை மத்திய அரசு தடை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களை விட சமீப ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளன. இதற்கு காரணம் ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகள்தான். மட்டுமல்லாது தற்போது எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+