பாரத் அரிசி.. இன்று முதல் மத்திய அரசின் மலிவு விலை அரிசி விற்பனை.. அரிசி விலை உயர்வு கட்டுப்படுமா?
டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் மானிய விலையில் 'பாரத் அரிசியை' விற்பனை செய்ய உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் இந்த வேகத்தில் வளரவில்லை. குறைவான ஊதியம், நாளுக்கு நாள் குறைந்து வரும் வேலை வாய்ப்பு, நிரந்தரமில்லாத வேலைகள் போன்றவை காரணமாக சாமானிய மக்களால் இந்த விலைவாசி உயர்வுக்கு ஈடுகட்ட முடியவில்லை. எனவே இம்மக்களுக்காக மத்திய அரசு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் டால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக 'பாரத் அரிசி' விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்திய அளவில் அரிசியின் சராசரி விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் 'பாரத் அரிசி'யை மத்திய அரசு விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது. 1 கிலோ ரூ.29க்கு என, 5 மற்றும் 10 கிலோ மூட்டையில் அரிசி விற்கப்படும். இந்த விற்பனை இன்று முதல் தொடங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அரிசியை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சமீபத்தில் பாசுமதி அல்லாத அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது மானிய விலையில் பாரத் அரிசி விற்பனையை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.
அதேபோல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பதப்படுத்துபவர்கள் / மில்லர்கள், வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், தங்கள் அரிசி கையிருப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications