சூரத், இந்தூர் சம்பவம்.. அன்னபோஸ்ட்டில் ஜெயித்த பாஜக! தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
டெல்லி: இந்தூர் தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர் வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்றிருந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையர், "அது அவர்களின் உரிமை சார்ந்த விஷயம்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.
காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சூரத் மற்றும் இந்தூர் தொகுதிகளிலிருந்து வாபஸ் பெற்றனர். இந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்தூர் தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி மனுவை வாபஸ் பெற்ற சில மணி நேரங்களிலேயே பாஜகவில் இணைந்து காங்கிரசுக்கு ஷாக் கொடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் ஆசிஷ் அகர்வால், "தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் வேட்பாளர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாகவே அந்த கட்சி தோல்வியடைந்துவிட்டது" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தலையீடு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் மிரட்டப்பட்டதால்தான் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை வெளியிடும் செயல்முறை குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார், "வேட்பாளர்கள் தங்கள் மனுவை திரும்ப பெற்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? வேட்புமனுக்கள் வலு கட்டாயமாக திரும்ப பெற்றிருந்தால் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம்.
"வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட பின்னர் வாபஸ் பெற்றால் தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்? அது அவர்களின் உரிமை சார்ந்த விஷயம். வற்புறுத்தல் காரணமாக வேட்புமனுவை திரும்பப் பெற்றாரா என்று தான் பார்க்க வேண்டியுள்ளது" தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications