விடிய விடிய நடந்த மீட்டிங்.. கர்நாடக முதலமைச்சர் பதவி யாருக்கு.. பரபரத்த இறுதி வாதங்கள் இதுதான்
டெல்லி: கர்நாடகாவின் முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று (மே.17) நள்ளிரவு வரை ஆலோசனை நீடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் வீட்டை விட்டு ஆலோசனையை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எப்படியாவது வெற்றி கொடியை நாட்டிவிட வேண்டும் என தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் என மும்முனை போட்டி நிலவியது. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே ஓர் உடன்பாடு எட்டப்பட்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

ஒரு வருடம் அப்படி இப்படி என சென்றபோது திடீரென இந்த கூட்டணியில் இருந்த 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். அவ்வளவுதான் காங்கிரஸ் தனது ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது என்று தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தீயாய் வேலை பார்த்தனர். வேலைக்கான பலன் 2023 தேர்தல் ரிசல்டில் எதிரொலித்தது.
மொத்தமிருந்த 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். ஆனால் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி மேஜிக் செய்தது. இந்த வெற்றிக்கு மாநில தலைவர் கே.டி.சிவகுமார் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. காரணம் கட்சி துவண்டு போயிருந்த காலத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்று அதனை சிறப்பாக வழிநடத்தினார். இது நிர்வாகிகளை உற்காமூட்டியது. இவை அனைத்தும் தேர்தல் ரிசல்டில் பிரதிபலித்து. சிவகுமார் கர்நாடகாவின் ஒக்கலிகா சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார். பொதுவாக இவர்களின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்குதான் செல்லும். ஆனால் இந்த முறை இவர்கள் அதிகம் உள்ள பழைய மைசூரு பகுதியில் காங்கிரஸ் கொடி நாட்டியுள்ளது.
அதாவது இவர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பியுள்ளன. இதற்கு பின்னர் சிவகுமாரின் முயற்சி இருக்கிறது. அதேபோல, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையாவும் ஒரு முக்கியமான தலைக்கட்டுதான். என்னதான் டி.கே.சிவகுமார் கடுமையாக வேலை பார்த்திருந்தாலும் அவர் தென் கர்நாடகாவின் லீடராகதான் கருதப்படுகிறார். ஆனால் சித்தராமையா ஒட்டுமொத்த மாநிலம் முழுமைக்குமான தலைவராக இருக்கிறார். மட்டுமல்லாது இவருக்கு தலித், இஸ்லாமியர், குருபர் ஆகிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக செல்வாக்கும், சிவகுமாரைவிட அதிக எம்எல்ஏக்களின் ஆதரவும் இருக்கிறது.
ஆக இப்படி ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருப்பதுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருமே தற்போது முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட்டு வருகின்றனர். தானக்கு 75 வயது ஆகிறது என்றும், இதுவே கடைசி அரசியல் பதவி என்றும் சித்தராமையா தனது வாதத்தை முன் வைத்திருந்தார். எனவே கடைசியாக இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மறுபுறம் சிவகுமார் தன்னுடைய வேலைபாடுகளை காட்டி பதவி கேட்டு வருகிறார். ரிசல் வந்த பின்னர் கடந்த 3 நாட்களாக இரு தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இருவருமே ராகுல் காந்தியையும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலையும் சந்தித்து தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வந்தனர்.
இவர்களில் யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்று கட்சி மேலிடம் இறுதி முடிவை எடுத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு (மே.17) இருவரும் ராகுல் காந்தியையும், பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலையும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவையும் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபாலுடன் அவரது இல்லத்தில் நள்ளிரவை கடந்து ஆலோசனை நடத்தினார். அவர் அங்கிருந்து வெளியேறியபோது நள்ளிரவு மணி 12.20.
இந்நிலையில் இன்று (மே.18) கர்நாடக முதலமைச்சர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது முதலமைச்சரா சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் இணைந்த பணியாற்ற ஒப்புதல் தெரிவத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நள்ளிரவு கடந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இந்த பிரச்னைக்கு இவ்வாறு தீர்வை கண்டிருக்கிறது.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா











Click it and Unblock the Notifications