ஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது? சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு
டெல்லி: குமாரசாமி அரசு தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம், இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று தெரிகிறது. ஏனெனில் கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக, அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர், உச்சநீதிமன்றத்தை அணுகி தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் விரைவில் கேட்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கூடிய விரைவில் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதோடு, அதுவரை அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி சட்டசபைக்கு வர வைக்க கூடாது என்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து நேற்று சட்டசபையில் பாயிண்ட் ஆப் ஆர்டர் பிரச்சினையைக் கிளப்பினார் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா. அரசியல் சாசனம் அட்டவணை 10ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விப் அதிகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்ட பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதே கோரிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. விப் உத்தரவு பற்றி, உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்தால், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவை பிறப்பித்து, அவர்களை கட்டாயப்படுத்தி வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முடியும், என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications