டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆப்டிகல் இல்யூஷன் படம்: "காட்டுக்குள் மறைந்திருக்கும் மான்".. 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பாஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டுக்குள் ஒரு மான் இருக்கிறது. 10 செகண்டிற்குள் இந்த மானை கண்டுபிடித்தால் நீங்க கில்லாடி தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது, இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும்.. இல்லாத ஒன்றை இருப்பது போலவும் காண்பிக்கும் படம் தான்.

இதனால் அப்படத்தில் மறைந்து இருக்கும் விலங்கையோ? அல்லது பறவைகளையோ நம்மால் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாது.

ஆப்டிகல் இல்யூஷன்: மகுடி ஊதி பாம்பாட்டி தேடும் பாம்பு.. படத்தில் எங்கே இருக்கு? கண்டுபிடிங்க பாஸ்! ஆப்டிகல் இல்யூஷன்: மகுடி ஊதி பாம்பாட்டி தேடும் பாம்பு.. படத்தில் எங்கே இருக்கு? கண்டுபிடிங்க பாஸ்!

ஆப்டிகல் படம்

ஆப்டிகல் படம்

குறிப்பாக சொல்லப்போனால் பார்த்த சில நொடிகளிலேயே நம்மால் படத்தில் மறைந்து இருப்பதனை கண்டுபிடிக்க முடியாது. மூளைக்கு வேலை கொடுத்து நம்மை ஆழ்ந்து சித்திக்க வைக்கும். இதனால் இது போன்ற படங்களால் நமது நினைவாற்றலையும் சோதித்து பார்க்கலாம். ஒருசில படங்கள் நமது தலையை பிய்த்துக்கொள்ளும் வகையில் இருக்கும். இதன் காரணமாக பலரும் நமது நினைவாற்றலை சோதிக்க இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து வருகின்றனர்.

காட்டில் மான்

காட்டில் மான்

ஓய்வு நேரத்தில் இது போன்ற படங்களை அதிகம் பேர் பார்த்து வருகின்றனர் என்றும் சொல்லலாம். இந்த நிலையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. காடு போன்று கொடுக்கப்பட்டுள்ள அந்த படத்தில் மான் ஒன்று இருக்கிறதாம்.. அந்த மானை கண்டுபிடிப்பதே இன்றைய சவாலாகும்... அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க சவால் விடுக்கப்படுகிறது.

 முதலில் கண்டுபிடிப்பது யார்

முதலில் கண்டுபிடிப்பது யார்

சரி படத்தில் இருக்கும் மானை யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.. படத்தில் அதிக மரங்கள் இருக்கின்றன. இதேபோல் நதி ஒன்று ஓடுகிறது. இதில் எங்கே மான் இருக்கிறது என்று பலரும் நினைக்கலாம். முதலில் மேலோட்டமாக பார்த்தால் மான் இருப்பது தெரியாது. சற்று கூர்ந்து பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் மானை கண்டுபிடித்து விடலாம்.

10 செகண்ட் தான் டைம்..

10 செகண்ட் தான் டைம்..

மிகவும் சவால் மிகுந்த படம் என்று இதை சொல்ல முடியாது. எளிதில் கண்ணில் படும்படியாக தான் இந்த மான் படத்தில் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட 10 செகண்டில் மானை கண்டுபிடித்து விடலாம் என்று நினைக்கிறோம். சரி டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1..2..3.. 10.. டைம் ஓவர்.. யார் யாரெல்லாம் மானை கண்டுபிடித்தீர்களோ அவர்கள் அனைவருமே கழுகுக்கண் பார்வை கொண்டவர்கள் தான்.. சிறந்த நினைவாற்றல் படைத்தவர்கள் தான்..

மானை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ்

மானை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ்

சரி 10 செகண்டில் மானை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ்.. படத்தை மீண்டும் உற்று பார்க்கவும்.. எப்போதும் போல படத்தின் மேல் பகுதியில் பார்க்காமல் படத்தின் வலது பக்கம் நடுப்பகுதியில் மட்டும் பார்த்தால் எளிதில் மான் உங்கள் கண்ணுக்கு தெரிந்துவிடும். இதேபோல் மான் மரத்தின் வடிவிலோ.. அல்லது மேகத்தின் வடிவிலோ இருக்கும் என்றோ பார்க்க வேண்டாம்.

மான் எங்கே இருக்கிறது?

மான் எங்கே இருக்கிறது?

அப்படி பார்த்தால் மான் கண்ணுக்கு தெரியாது.. மான் அதன் உண்மையான வடிவிலேயே இருக்கும்... ஆனால் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். இப்போது தேடிப்பாருங்கள்.. இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.. அப்படியும் தெரியவில்லையே? என்பவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மான் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது... பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

English summary
In the optical illusion image given here, there is a deer in the forest. If you find this deer within 10 seconds then you are smart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X