Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி திறந்த வைத்த சுரங்கப்பாதை.. இரண்டே ஆண்டில் நிரந்தர சேதம்! பொதுப்பணித்துறை தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுமார் ரூ.777 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட டெல்லி பிரகதி மைதான சுரங்கப்பாதை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சுரங்கப்பாதை இரண்டே ஆண்டுகளில் முற்றிலுமாக சேதமடைந்திருப்பது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தலைநகரான டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டதுதான் டெல்லி பிரகதி மைதான சுரங்கப் பாதை. 1.4 கி.மீ நீளம் கொண்ட இந்த பாதை டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றிற்கிடையே எளிமையான போக்குவரத்தை எளிமையாக்கியது.

The Della Pragati Maidan tunnel, inaugurated by Prime Minister Narendra Modi, is irreparably damaged


ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக இந்த சுரங்க பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டன. பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வெளியேறாததால், சுரங்கப்பாதை நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கசிவை கட்டுமான நிறுவனம் சரி செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த சுரங்கப்பாதை திறந்து வைக்கப்படும்போது உலக தரத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களும் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமையில் இதனை மீண்டும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது நீர் கசிவு அதிகரித்திருக்கிறது, சிமெண்டில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது, மோசமான வடிகால் காரணமாக நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது, இது கட்டுமானத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது என்று கூறியுள்ளனர்.

எனவே இந்த பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சுரங்கப்பாதையை கட்டிய எல்&டி நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கும்போது, சுரங்கப்பாதைக்குள் இருந்த குப்பைகளை வெறும் கையால் அள்ளி சுத்தம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+