Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்டிக்கல் இல்யூஷன்: ஒரு நாய் இங்க இருக்கு.. இன்னொரு நாய் எங்கே.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் மாயை படத்தில் ஒரு நாய் வெளிப்படையாக தெரியும்படி இருக்கிறது.. மற்றொரு நாய் மறைந்து இருக்கிறது.. 7 செகண்டில் மறைந்து இருக்கும் நாயை கண்டுபிடித்தால் நீங்க கிரேட்.

தற்போது இணையத்தில் டிரெண்டிங் வீடியோக்கள், டிரெண்டிங் செய்திகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

அலுவலக நேரங்களை தவிர்த்து பிற நேரங்களில் இது போன்ற சுவாரசிய டிரெண்டிங் வீடியோக்களை பார்த்து பலர் ரிலாக்ஸ் ஆகி வருகின்றனர்.

ஒளி மாயை படங்கள்

ஒளி மாயை படங்கள்

அந்த வரிசையில் ஆப்டிகல் இல்யூஷன் என சொல்லப்படும் ஒளி மாயை புகைப்படங்களையும் பலரும் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். பார்ப்பவர்களின் கண்களை குழுப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க வைக்கும் அளவுக்கு ஒரு சில படங்கள் நமது கவனிப்புத்திறனை சோதித்து பார்க்கும்.

காணல் நீர் தோன்றுவது போல

காணல் நீர் தோன்றுவது போல

சாலைகளில் காணல் நீர் தோன்றுவது போல இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதலில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும்.. ஆழ்ந்து பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு என்று சொல்லலாம். அந்த வகையில் இன்று ட்விட்டரில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்ட் ஆகி வருகிறது.

2 நாய் இருக்கு

2 நாய் இருக்கு

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 நாய்கள் இருக்கிறதாம்.. அதில் ஒரு நாயை நம்மால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்றும்.. மற்றொரு நாயை கண்டுபிடிப்பதது தான் இன்றைய சவால் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு நாய் இங்க இருக்கு... இன்னொரு நாயை எங்கே என்று சொல்லுகிற வகையில்.. 2-வது நாயை 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க அதிக நினைவாற்றல் கொண்டவர்களாம்...

7 செகண்ட் டைம்

7 செகண்ட் டைம்

சரி வாருங்கள் 2-வது நாய் எங்கு இருக்கிறது என்று பார்ப்போமா... படத்தில் இரண்டு பெண்கள் காட்டுப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் அருகே ஒரு நாய் உள்ளது. அருகில் மரங்கள் செடிகள் உள்ளது. ஆனால் இன்னொரு நாய் இந்த படத்தில் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றே சொல்லலாம்.. சரி 7 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்... படத்தில் மறைந்துள்ள நாயை கண்டுபிடிக்க முடிகிறதா?..

எங்கு இருக்கிறது

எங்கு இருக்கிறது

குறிப்பிட்ட 7 செகண்டில் மறைந்திருந்த நாயை கண்டுபிடித்தீர்கள் என்றால் நிச்சயமாக நீங்க கிரேட் தான்.. ஆனால் படத்தில் எங்கேயுமே மறைந்துள்ள நாயை காணவில்லையே என்று கூறுபவர்கள் கூடுதலாக இன்னும் 10 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் உற்று பாருங்கள்... நாய் எங்கு இருக்கிறது என்று தெரிகிறதா.. தெரியதாவர்கள்... படத்தில் காட்டுகுள்ளோ.. மரத்தின் பின்னோ நாய் இருக்கிறது என்று தேடினால் கிடைக்காது..

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது

படத்தில் நிற்கும் இரண்டு பெண்களை மட்டும் கவனியுங்கள்.. அவர்களில் ஒருவரது கையில் தான் நாய் உள்ளது. இப்போது நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.. இடது புறம் நிற்கும் பெண்ணின் கையை மட்டும் பாருங்கள்.. இப்போது தெரிகிறதா அந்த நாய் எங்கு மறைந்திருக்கிறது என்று.... மேல் உள்ள படத்திலும் மறைந்திருக்கும் நாய் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+