செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..வட்டி விகிதத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய முடிவு..கொட்டப்போகும் பணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் அரசாங்க ஆதரவுள்ள இத்திட்டம், வரி இல்லாத வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டை வழங்குகிறது. தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை இது அளிக்கிறது.

selvamagal saving scheme selvamagal semippu thittam narendra modi

2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி - மார்ச்) சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தற்போதைய வட்டி விகிதமான 8.2% அப்படியே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் மற்றும் பிற சேமிப்புகளுடன் ஒப்பீடு

கடந்த 2024, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கான வட்டி 8.2% ஆகத் தொடர்ந்து வருகிறது. தற்போது இது மற்ற வங்கி டெபாசிட்டுகளை விட அதிக லாபம் தருவதாக உள்ளது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் aka சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): 8.2% வட்டி (ஆண்டுதோறும் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படும்).

பொது வருங்கால வைப்பு நிதி (PPF): 7.1% வட்டி.

முக்கிய வங்கிகள் (SBI, HDFC, ICICI): பெரும்பாலான வங்கிகளின் நிலைத்த வைப்பு நிதி (FD) வட்டி விகிதங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் திட்டத்தை விடக் குறைவாகவே உள்ளன.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் யாரெல்லாம் கணக்குத் தொடங்கலாம்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்குவதற்கான விதிமுறைகள் மிகவும் எளிமையானவை:

வயது வரம்பு: 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் இக்கணக்கைத் தொடங்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்குகளின் எண்ணிக்கை: ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்குத் தொடங்க முடியும். (இருப்பினும், முதல் பிரசவத்திலோ அல்லது இரண்டாவது முறையிலோ இரட்டை அல்லது மூன்று பெண் குழந்தைகள் பிறந்தால், கூடுதல் கணக்குகள் தொடங்க அனுமதி உண்டு).

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் நிதி நிர்வாகம்: பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை பாதுகாவலரே கணக்கை நிர்வகிக்க வேண்டும். அதன் பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, கணக்கு வைத்திருக்கும் பெண்ணே அதன் முழு உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

குறைந்தபட்ச முதலீடு: ஆண்டுக்கு ரூ. 250 முதல் சேமிக்கத் தொடங்கலாம்.

அதிகபட்ச முதலீடு: ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

வரிச் சலுகை: இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு, அதற்கு ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றிற்கும் வருமான வரிச் சட்டம் 80C-இன் கீழ் முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது உலகளவில் நிலவும் பொருளாதாரச் சூழல்கள் மற்றும் அரசுப் பத்திரங்களின் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வட்டி விகிதம் மாற்றமின்றித் தொடர்வது சிறு முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+