சிவப்பு சட்டை அணிந்த மர்ம பெண்.. ஏபிவிபியின் முக்கிய உறுப்பினர்.. ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான உண்மை!
ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று விவரம் வெளியாகி உள்ளது.
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று விவரம் வெளியாகி உள்ளது. இந்திய டுடே சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்த உண்மை வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் அன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தையே நிகழ்த்தினார்கள். இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.
ஜேஎன்யூவில் இடதுசாரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தற்போது இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. நேற்று முதல்நாள், ஜேஎன்யூவில் மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.

எப்படி நடனத்து
தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டது, ஆயுதங்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து ஏபிவிபி மாணவர்களே சொல்லும் வீடியோக்கள் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பெறப்பட்டு, வெளியிடப்பட்டது. இந்தியா டுடேவில் இரவு நிகழ்ச்சியில் இதற்கான ஆதாரங்கள் வெளியிட்டப்பட்டது. அதன்பின் இது தொடார்பாக விவாதங்கள் நடந்தது.

மீண்டும் அடுத்த வீடியோ
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜேஎன்யூ தாக்குதல் தொடர்பாக இன்னொரு ஸ்டிங் ஆபரேஷன் ஆதாரங்களை இந்தியா டுடே சேனல் வெளியிட்டுள்ளது. ஜேஎன்யூ தாக்குதலை மாணவர்கள் மட்டும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு படிக்கும் சில மாணவிகளும் உள்ளே புகுந்து இப்படி கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பெண்கள் எப்படி
சில பெண்கள் கையில் கத்தியும் வைத்துக் கொண்டு மாணவர்களை தாக்கி உள்ளனர். அதிலும் சிவப்பு சட்டை போட்ட இந்த பெண் , கையில் கத்தி வைத்துக்கொண்டு சக மாணவர்களை மிரட்டி உள்ளார். இவர் யார்? எப்படி பெண்ணாக இருந்து கொண்டு சக மாணவர்களை தாக்க முடிகிறது என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

என்ன அடையலாம்
இந்த நிலையில் இவரின் அடையாளத்தை இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது. இந்த சிவப்பு சட்டை அணிந்த பெண் கோமல் சர்மா. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர் என்ற உண்மை வெளியாகி உள்ளது.
|
டெல்லி கல்லூரி
இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் டாவ்லாட் ராம் கல்லூரியை சேர்ந்தவர் என்று விவரங்கள் இந்த ஆபரேஷன் மூலம் வெளியாகி இருக்கிறது. இவரின் நண்பர்கள் பலர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியான அன்று இவர் தன்னுடைய நண்பர்களிடம் புலம்பி உள்ளார்.
|
என்ன பயம்
என்னுடைய புகைப்படம் வெளியே வந்துவிட்டது. எனக்கு பயமாக இருக்கிறது. என்னை பற்றி யாராவது கேட்டால் உங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிடுங்கள் என்று கோமல் சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்தியா டுடேவின் ஸ்டிங் ஆபரேஷனில் ஏபிவிபியை சேர்ந்தவர்களே இது கோமல் சர்மாதான். அவர் ஏபிவிபியை சேர்ந்தவர்தான் என்று உறுதி செய்துள்ளனர்.

உறுதியானது
கோமல் சர்மா என்னிடம் தாக்குதல் அன்று பேசினார். எப்படி தாக்குதலை நடத்த வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார். ஜேஎன்யூ உள்ளே தாக்குதல்காரர்களை அவர்தான் ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்தியது என்று ஏபிவிபி மாணவர் அக்சாத் அவாஸ்தி தெரிவித்துள்ளார்.

ஏன் இப்படு
இன்னும் ஏபிவியை சேர்ந்த பல மாணவர்கள், இவரின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்கள் மூலம், போட்டோக்களை வெளியிட்டு உண்மையை உடைத்துள்ளனர். இந்த தாக்குதலை சம்பவத்திற்கு பின் கோமல் சர்மா கல்லூரி பக்கம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications