5 நாள் டைம்.. மூட்டை முடிச்சை கட்டுங்க.. கனடா தூதரை விரட்டியது இந்தியா.. ட்ரூடோவிற்கு வகையான பதிலடி
டெல்லி: கனடா தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேவை வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டு உள்ளது. கனடா இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்முறையாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை இப்படி வெளியேற்றி உள்ளது.

இதனால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவும் கனடாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவிற்கான கனடா உயர் கமிஷ்னர் கேமரூன் மெக்கே இன்று டெல்லி வரவழைக்கப்பட்டு அவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கனடா பிரதமர் ட்ரூடோவின் பேச்சுக்கு அவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதோடு கனடா தூதரக அதிகாரி வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட தூதர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நீங்கள் எங்கள் தூதரை அனுப்பியது தவறு. இதனால் நீங்கள் வெளியேற்றப்படுகிறீர்கள். உங்களுக்கு 5 நாட்கள் கால அவகாசம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவு அரசாங்கத்தின் நேரடி நிலைப்பாடு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கனடா ஈடுபடுவது குறித்து இந்தியா கனடா தூதரிடம் புகார் அளித்துள்ளது. புகாரோடு கனடா பிரதமருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?: காலிஸ்தான் தலைவரை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். கனடா, பிரதமர் ட்ரூடோ, இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது.
1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications