டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்குகள்.. அயோத்திக்கு 2வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு என்ற பெயரை அயோத்தி வழக்கு பெற்றுள்ளது. முதல் இடத்தை கேசவானந்த பாரதி நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு விளங்குகிறது.

உச்ச நீதிமன்றம் 1950ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த 69 ஆண்டுகளில் பல வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்துள்ளது. இந்நிலையில் 1970களில் நிலச் சீர்திருத்த சட்டத்தின் கீழ் கேரளாவில் எதனீர் மடத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பீடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

The longest-running cases in Indian judicial history

1973ம் ஆண்டு நடந்த இந்த வழக்கு தான் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே அதிக நாட்கள் நடைபெற்ற வழக்கு ஆகும். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தினார். நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக இந்த அமர்வு 68 நாட்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அயோத்தியில் 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.. விஷ்வ இந்து பரிஷத்அயோத்தியில் 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.. விஷ்வ இந்து பரிஷத்

அதன் பிறகு, 2018ஆம் ஆண்டு ஆதார் வழக்கு அதிக நாட்கள் விசாரணை நடந்தது. நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கு, தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 38 நாட்கள் விசாரித்தது.

அதன்பிற்கு தற்போது அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 40 நாட்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த அயோத்தி வழக்கு, இந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற 2ஆவது பெரிய வழக்கு ஆகும்.

English summary
The longest-running cases in Indian judicial history, ayodhya case secand place
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X