பிறந்தது புத்தாண்டு 2022 .. சமோவா, நியூசிலாந்தில் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் கிழக்கு பசிபிக் நாடுகளான சமோவா, கிரிப்பட்டி, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்திய நேரப்படி சுமார் 4.30 மணிக்கே புத்தாண்டு பிறந்ததையடுத்து அந்த நாடுகளில் உற்சாகம் களைகட்டியுள்ளது.

கொரோனா உள்ளிட்ட பல இன்னல்கள் காரணமாக 2021ஆம் ஆண்டு மக்களுக்கு சற்று சிறுசிறு தொல்லைகள் தந்திருந்தாலும் இன்றுடன் இந்த ஆண்டு நினைவு நிறைவு பெறுகிறது. பல நினைவுகளை தன்னுள் புதைத்து கொண்டு 2021 விடைபெறும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது.

2022 ஆம் ஆண்டாவது கடந்த இரண்டு ஆண்டுகளை இல்லாமல் இருக்கவேண்டும் என வரப்போகும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு நாடுகள் உற்சாகத்துடன் காத்துக்கிடக்கின்றன.

புத்தாண்டு பிறந்தது

புத்தாண்டு பிறந்தது

இந்நிலையில் உலகின் முதல்நாடாக சமோவா, கிரிப்பபட்டியிம், அடுத்ததாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 4.29.05 மணிக்குபூமியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பசிபிக் தீவு நாடுகளான சமோவா, கிரிப்பட்டியில் புத்தாண்டு பிறந்துள்ளது.

நியூசிலாந்தில் உற்சாகம்

நியூசிலாந்தில் உற்சாகம்

அதற்கு அடுததாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சி, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 2021ஆம் ஆண்டு முடிந்து, 2022 புத்தாண்டில் உலக நாடுகள் அடியெடுத்து வைக்கின்றன. இதையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நள்ளிரவு முடிந்து புத்தாண்டு தொடங்குவதை குறிக்கும் வகையிலான கவுன்டவுன் முடிந்ததும், அங்கு பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

களைகட்டிய வானவேடிக்கை

களைகட்டிய வானவேடிக்கை

வாண வேடிக்கையின்போது வானுயர கோபுரங்களில் இருந்து பல்வேறு நிறங்களை கொண்ட பட்டாசுகளை வானத்தை நோக்கி சென்று வெடித்து சிதறின. வானில் இருந்து பூ ஜூவாலை பொலிவது போன்ற காட்சியை காண்போருக்கு ஏற்படுத்தின. வாண வேடிக்கையை அப்பகுதியில் திரண்ட சுற்றுலா பயணிகளும், தொலைக்காட்சிகள் மூலமும் ஏராளமானோர் கண்டுரசித்தனர். வாணவேடிக்கையை தொடர்ந்து, ஆக்லாந்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

மற்ற நாடுகளில் எப்போது புத்தாண்டு

மற்ற நாடுகளில் எப்போது புத்தாண்டு

இதேபோல் இந்திய நேரப்படி 5.30 மணிக்கு ரஷ்யா நட்டின் ஒரு சில பகுதிகளிலும், மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன், கான்பரா உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், இரவு 11.30 மணிக்கு இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா தனது புத்தாண்டை வரவேற்கவுள்ளது. அதற்கடுத்தபடியாக காலை 5.30 மணிக்கு இங்கிலாந்து நாட்டிலும், ஜனவரி காலை 9 மணி முதல் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை கொண்டாடவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+