வர்த்தக சிலிண்டர் கேஸ் விலை ரூ.101 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது.. வர்த்தகர்கள் அதிர்ச்சி..!
டெல்லி: வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 101 ரூபாய் அதிகரித்துள்ளதால் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் ரூபாய் 50ம் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் 175 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது..
கடந்த சில மாதங்களில் வணிகப் பயன்பாடு கொண்ட சிலிண்டர்கள் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வீழ்ச்சியைச் சந்தித்து உள்ள நிலையில், ஓராண்டில் மட்டும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் செலவீனம் அதிகரிப்பதாக வியாபாரிகள் கூறியிருந்தனர்.
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வரவு சற்று குறைந்துள்ளதாக கூறியுள்ள நிலையில் தற்போது டிசம்பர் மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து 2,234.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் 770 ரூபாய் உயர்ந்துள்ளதும், முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதி 1865 ரூபாய்க்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை எனவும், கடந்த மாதம் வெளியே தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications