நாய் போல நடத்தினார்கள்.. சுட்டேன்.. குர்கான் நீதிபதியின் மனைவி மகனை சுட்ட அதிகாரி பரபரப்பு!
டெல்லியில், குர்கான் நீதிமன்ற நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்ட பாதுகாப்பு அதிகாரி அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில், குர்கான் நீதிமன்ற நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்ட பாதுகாப்பு அதிகாரி அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஹரியானா குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக உள்ள கிருஷ்ணன் காண்ட் சர்மாவின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் நீதிபதி கிருஷ்ணன் காண்ட் சர்மாவின் மனைவி ரீத்து மரணம் அடைந்துவிட்டார். நீதிபதியின் மகன் துருவ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மிகவும் மோசம்
நேற்று காலை நீதிபதி கிருஷ்ணன் காண்ட் சர்மாவின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் சுட்டார். நடுரோட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், உங்கள் மகன் மற்றும் மனைவியை கொலை செய்ய போகிறேன் என்று அந்த நீதிபதியிடம் போனில் சொல்லிவிட்டு சுட்டுள்ளார்.

எப்படி இருக்கிறார்கள்
இந்த துப்பாக்கி சூடு காரணமாக தற்போது அந்த நீதிபதியின் மனைவி ரீத்து பலியாகி உள்ளார். அதேபோல் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் துருவ் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறான். அவனுக்கு தற்போது மூளை மரணம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 வருடம் நடந்த கொடுமை
இதற்கான காரணத்தை தற்போது அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். தன்னை கடந்த 2 வருடமாக நீதிபதி குடும்பம் மிக மோசமாக நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். நாய் மலத்தை அள்ளுவது, பாத்ரூமை சுத்தம் செய்வது தொடங்கி பல மோசமான பணிகளை செய்ய வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

வித்தியாசம் இல்லை
மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், அந்த நீதிபதி குடும்பம் என்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியது. என்னை நாய் போல நடத்தினார்கள். அவர்களுக்கு நாய்க்கும் மனிதருக்கும் வித்தியாசம் தெரியாது. என்னை கொடுமை படுத்தியதற்குத்தான் கொலை செய்தேன் என்றுள்ளார்.

கடைசி சண்டை
மேலும், கடைசியாக அன்று ஏன் கொலை செய்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். அன்று அந்த சிறுவன் துருவ் வண்டியின் சாவியை கேட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அதிகமாகி அவர்களை சுட்டதாக கூறியுள்ளார் அந்த போலீஸ்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications