பாஜகவை ட்விட்டரில் பொளந்த ப சிதம்பரம்..'இந்திய கூட்டணி வெற்றிக்கு நல்ல அறிகுறி'.. தாருமாறு உற்சாகம்
டெல்லி: கேரளா, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் உள்பட ஆறு மாநிலங்களில் நடந்த 7 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 4 இடங்களில் வென்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி உற்சாகம் அடைந்துள்ளது. அதன் எதிரொலியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாஜகவை விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி, கூட்டணி இன்றி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா 1ல் வெற்றி பெற்றுள்ளது. 4 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்ற நிலையில் 3ல் மட்டுமே பாஜக வென்றது.

இந்தியா கூட்டணிக்கும் - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இடையில் நடக்கும் முதல் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள கோசியில் இந்தியா கூட்டணி சார்பாக சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளார். ஜார்க்கண்டில் தும்ரி தொகுதியில் இந்திய கூட்டணியின் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் துப்குரி தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் புதுப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் வெவெற்றி பெற்றுள்ளார் திரிபுராவில் உள்ள போக்ஸாநகர், தன்பூர் மற்றும் உத்தரகாண்டின் பாகேஷ்வரில் பாஜக வெற்றி பெற்றுள்ளார்.
இன்றைய இடைத்தேர்தல் முடிவால் இந்தியா கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் அளவுக்கடந்த உற்சாகத்தில் உள்ளனர். 26 கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்த இடைத்தேர்தல் வெற்றி உதவும் என காங்கிரஸ் நம்புகிறது.
The news of the day is not the arrival of G20 leaders for the Leaders' Summit. The top news is the overall result of the seven by-elections that were announced today
— P. Chidambaram (@PChidambaram_IN) September 8, 2023
Clearly, the winner is INDIA. INDIA beat the BJP 4:3
The BJP won in two seats in Tripura and the lone seat in…
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியுள்ளதாவது: "ஜி 20 உச்சி மாநாட்டிற்கு தலைவர்களின் வருகை அல்ல இன்றைய முக்கிய செய்தி.. இன்று அறிவிக்கப்பட்ட ஏழு இடைத்தேர்தல்களின் ஒட்டுமொத்த முடிவுதான் முக்கிய செய்தி.
இன்றைய இடைத்தேர்தல் முடிகளின் படி தெளிவான வெற்றியாளர் என்பது இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணி 4:3 என்ற கணக்கில் பாஜகவை வீழ்த்தி உள்ளது. திரிபுராவில் 2 இடங்களிலும் உத்தரகாண்டில் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது.
கேரளா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதில், உத்தரப்பிரதேசத்தல் பா.ஜ., மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆளும் கட்சியாக உள்ளது. பாஜகவும் அதன் பணபலமும் தோற்கடிக்க முடியாதவை அல்ல. பா.ஜ.க.வின் கோட்டையில் கூட பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதை இந்தியா கூட்டணி நிரூபித்துள்ளது. இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டணியின் வெற்றிக்கு ஒரு நல்ல அறிகுறி" என ப சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications