இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்தது.. ஒன்றரை லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
இந்திய அளவில் ஒரு கோடியை தாண்டியது தொற்று எண்ணிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது.. இன்றைய நாளில் தொற்று பாதிப்பு 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது, பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.. அதேசமயம், தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 95.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
Recommended Video

பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது... அதனால், இங்கு புதிய பாதிப்புகளும் கணிசமாக குறைந்து உள்ளன.

தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. அந்த வகையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12வது நாளாக 4 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
நேற்று மட்டும் நாடு முழுவதும் 342 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது... ஆனால், குணமடையும் விகிதம் 95.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பெருந்தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2ம் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications