பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி.. கடிந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து மேலெழுந்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து மனுதாரிடம் நீதிமன்றம் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் பசு குறித்து முக்கிய அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

கருத்து

இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பசுக்கள் மீது அதீத மதிப்பும் மரியாதையும் நிலவி வருகிறது. பசுக்களுக்கு குளிர் காலத்தில் ஸ்வெட்டர் தைத்து போடும் அளவுக்கு அதன் மீது மரியாதை இருக்கிறது. யாரேனும் பசுக்களை வதைப்பதாக தெரிந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் பாயும். பசுவை பாதுகாக்க தனி சட்டமே இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகளும் வட மாநிலத்தில் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 தீர்ப்பு

தீர்ப்பு

அதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பசு வதை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சேகர் யாதவ் முன் விசாரனைக்கு வந்தது. விசாரணையில் குற்றவாளிக்கு ஜாமீன் மறுத்து தீர்ப்பு வழங்கினார். 11 பக்கங்கள் கொண்ட இந்த தீர்பில் பசு வதை குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். அதில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தேசிய விலங்கு

தேசிய விலங்கு

மேலும், தேசிய விலங்காக அறிவிப்பது மட்டுமல்லாது பசுவை பாதுகாப்பது இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருந்தார். பசுவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருத கூடாது என்றும் அவர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுதான் வேலையா?

இதுதான் வேலையா?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த தீர்ப்பு கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற தொடங்கியது. நிலைமை இவ்வாறு இருக்க இன்று உச்சநீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள் இதுதான் எங்கள் வேலையா? என்றுk் கோபமாக கேள்வியெழுப்பி மனுவை தள்ளுபடி செய்துள்னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+