பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல்! ஜன.31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது!
டெல்லி: 2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வானது ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு தகுந்தபடி பட்ஜெட் கூட்டத்தொடர் இடைவெளி விட்டு நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அண்மையில் தான் நிறைவு பெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே 9 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிகளை சமாளிக்கும் வகையில் அதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள், சுகாதாரத்துறை மற்றும் விவசாய மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications