வாய் பிளக்க வைத்த சிஎஸ்கே.. மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. ஐபிஎல் சொத்துக்கள் இவ்வளவா?
டெல்லி: ஐபிஎல்லின் நிகர மதிப்பு 1.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு மட்டும் 1760 கோடியாக உள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் அமைப்பு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 இந்திய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிரான்சிஸ் முறையில் இதில் கலந்து கொள்கின்றன.

அணியில் ஒவ்வொரு வீரர்களும் பெரும் தொகை கொடுத்து இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 2020ம் ஆண்டில் ரூ.51062 கோடியாக கணக்கிடப்பட்டது. 2022 இல் இதன் மதிப்பு ரூ.90038 கோடியாக உயர்ந்தது.
தற்போது (2023) இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 1,3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஹூலைஹன் லோக்கே முதலீட்டு வங்கி கணித்துள்ளது. ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 26000 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் ஐந்தாம் முறையாக ஐபிஎல் போட்டியை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாக அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1606 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1564 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1490 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2023 முதல் 2027 வரை ரூ.52710 கோடிக்கு ஊடக உரிமைகள் வயாகாம்ஸ் ஸ்டார் போர்ட்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து மதிப்பு தான் மற்ற எல்லா அணியைவிட அதிகமாக உள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை அணியும் ஒன்று தான் இந்த அணி. இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனிவாசன் தான் இதன் உரிமையாளர் ஆவார். மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மற்றும் 2017 இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications