செம குட் நியூஸ்.. டெல்டா வைரஸை விட ஓமிக்ரான் மிக மிக ஆபத்து குறைவு.. டேட்டாவை நீங்களே பாருங்க!
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உருவான நாளில் இருந்து மிக வேகமாக பரவி வருகிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் வல்லரசு நாடுகளிலும் ஓமிக்ரான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 1,500-ஐ கடந்து செல்கிறது. தலைநகர் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று முக்கிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

ஓமிக்ரான் வைரஸ்
இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்று
ஒருபக்கம் தகவல்கள் வலம் வருகின்றன. ஆனால் டெல்டா வைரஸை விடவும் ஓமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்தனர்.

பயப்படும்படியாக ஏதும் இல்லை
மருத்துவமனைகளில் ஓமிக்ரான் வைரஸ் பாசிடிவ் விகிதம் அதிகமாகி பலர் சிகிச்சையில் இருந்தாலும் சிகிச்சையில் உள்ள 90% கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவையில்லை. அவர்கள் மிகவும் சாதரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயப்படும்படியாக ஏதும் இல்லை என்றும் அங்குள்ள தென் ஆப்பிரிக்கா மிகப்பெரிய மருத்துவமனைகளின் டாக்டர்கள் கூறினார்கள்.

சுட்டிக்காட்டும் டேட்டா
இந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் மிகவும் குறைவனது என்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து கூடுதல் டேட்டா கிடைத்துள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 91% பேருக்கு மூசசு விடுதல் தொடர்பான பிரச்சினை இருந்தது. ஆனால் அங்கு ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 31% பேருக்குதான் இந்த பிரச்சினை உள்ளது. டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் 7 நாட்கள் சிகிச்சையில் இருந்தனர். ஆனால் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் 3 நாட்கள் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர்.

ஓமிக்ரான் எவ்வளவோ பரவாயில்லை
டெல்டாவால் பாதிக்கப்பட்ட 74% பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 17% பேருக்குதான் ஆக்சிஜன் சிகிச்சை தேவையாக உள்ளது. டெல்டா வைரஸால் 69% பேர் மருத்துவமனைகளில் இருந்தனர். ஆனால் ஓமிக்ரான் வைரசால் 41% பேர் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனர். டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30% பேருக்கு ஐ.சி.யூ(அவசர சிகிச்சை) தேவைப்பட்டது. ஆனால் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 18% பேருக்குதான் ஐ.சி.யூ(அவசர சிகிச்சை) தேவைப்படுகிறது.
Recommended Video

ஓமிக்ரானால் 3% உயிரிழப்புகள் மட்டுமே
இதேபோல் டெல்டாவால் பாதிக்கப்பட்ட 12% பேருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை தேவையாக இருந்தது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட வெறும் 1.6% பேருக்குதான் வெண்டிலேட்டர் சிகிச்சை தற்போது தேவைப்படுகிறது. மிக முக்கிய விஷயமாக டெல்டா வைரசால் 29% உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் ஓமிக்ரானால் 3% உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. டெல்டா பாதிக்கும் சராசரி வயது 59 ஆக இருந்தது. ஓமிக்ரான் பாதிக்கும் சராசரி வயது 36 ஆக உள்ளது. வயதானவர்களை கொரோனா பாதிக்கும்போது அவர்கள் குணமாக நீண்ட நாட்கள் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications