மோடி பேச்சில் ஆர்.எஸ்.எஸ் நாற்றம் அடிக்குது.. அவங்க முன்னோர்கள் செஞ்சது மறந்திடுச்சா? கார்கே தாக்கு!
டெல்லி: மோடியின் பேச்சில் ஆர்எஸ்எஸ் நாற்றம் வீசுகிறது, ஆங்கிலேயர்களையும் முஸ்லீம் லீக்கையும் ஆதரித்தவர்கள் மோடி - ஷாவின் முன்னோடிகள் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டிஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது, பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சுதந்திரத்துக்கு முந்தைய முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் அறிக்கை போல உள்ளது" என்று விமர்சித்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர்களின் சித்தாந்த முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேயர் மற்றும் முஸ்லீம் லீக்கை ஆதரித்தனர், மோடியின் பேச்சில் ஆர்எஸ்எஸ் நாற்றம் வீசுகிறது என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "பிரதமர் மோடி - அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களையும் முஸ்லிம் லீக்கையும் ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது. 1942-ல் வெள்ளையனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி - அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்.
1940களில் சியாம பிரசாத் முகர்ஜி வங்கம், சிந்து மாகாணங்களில் முஸ்லீம் லீக்குடன் இணைந்து தனது அரசாங்கங்களை எவ்வாறு அமைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா? மோடி மற்றும் அமித் ஷா, அவர்களின் ஆட்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்க்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ் வாடை அடிக்கிறது. நாளுக்கு நாள் பாஜகவின் தேர்தல் கிராஃப் சரிந்து கொண்டே வருகிறது. இதனால் பாஜக அவர்களின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூரத் தொடங்கியுள்ளது.
ஒரே ஒரு உண்மை! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. இந்திய மக்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications