16500 போலீசார், ரோந்து கார்கள்.. ஆனாலும் காருக்கு அடியே.. பல கிமீ பெண் இழுத்து செல்லப்பட்ட கொடூரம்
டெல்லி: இளம் பெண் ஒருவர் காருக்கு அடியே பல கிமீ இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் குறைந்தது 7 ரோந்து வாகனம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
Recommended Video
தலைநகர் டெல்லியில் இளம் பெண் ஒருவர் காரின் அடியே இழுத்துச் செல்லப்பட்டு, கொடூரமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் சம்பவம் நடந்த சமயத்தில் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

உயிரிழப்பு
டெல்லியைச் சேர்ந்த 20 வயதே ஆன அஞ்சலி சிங் என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். காரில் சென்ற இவர்கள் திரும்பும் போது, அந்த பெண்ணை இடித்ததாகத் தெரிகிறது. நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணின் உடல் வாகனத்துக்கு அடியே சிக்கியது. இருந்த போதிலும், அந்த பெண்ணின் உடல் உடனேயே அவர்கள் சுமார் 4 கிமீ சென்றுள்ளனர். அங்குக் கடை வைத்திருந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

7 ரோந்து வாகனங்கள்
இதற்கிடையே இது குறித்து வேறு சில தகவல்களும் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் உடலை கார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இழுத்த சென்ற நிலையில், அது இரண்டு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகச் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த இரு போலீஸ் நிலையங்களிலும் 5 முதல் 7 ரோந்து வாகனங்கள் இருந்து இருக்க வேண்டும். அவை சாலையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் என்ன ஆனது எனத் தெரியவில்லை" என்றார்.

16,500 போலீசார்
புத்தாண்டை முன்னிட்டு 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக டெல்லி போலீசார் கூறியிருந்தனர். ஆனால், துரிதிஷ்டவசமாத இந்த கொடூரத்தை எந்த போலீஸ் அதிகாரியும் பார்க்கவில்லை. அந்த பெண்ணின் ஸ்கூட்டியில் கார் மோதிய இடத்தில் இருந்து அந்த பெண் 10-12 கிமீ தூரம் சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டார். அந்த கார் ஒரே சாலையில் மூன்று முறை யு-டர்ன் செய்துள்ளது. மூன்றாவது முறை யு-டர்ன் செய்யும் போது தான் உடல் கீழே விழுந்துள்ளது..

அந்த நபர்
இந்தச் சம்பவத்தை அங்குக் கடை வைத்திருந்த ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், அவர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார். பெண் உடல் அடியில் சிக்கியிருப்பதைப் பார்த்து, காரை நிறுத்த வைக்கவும் கூட முயன்றுள்ளார். இருப்பினும், அவர்கள் காரை நிறுத்தவில்லை. உள்ளே இருந்தவர்களைப் பார்க்கும் போது, பெண்ணின் உடல் கீழே இருப்பது தெரிந்து இருந்ததை போலவே இருந்ததாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கீழே உடல் சிக்கியிருப்பது தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்தனர்.

5 பேர் கைது
இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் இருந்த மாருதி பலேனோ கார் இவர்கள் யாருக்கும் சொந்தமானது இல்லை. இந்த காரின் உரிமையாளர் லோகேஷ் என்பவர். அவர் அசுதோஷ் என்பவருக்குக் காரை கொடுத்துள்ளார். அவர் அந்த காரை அதைத் தனது நண்பர்களான அமித் மற்றும் தீபக் கண்ணாவிடம் கொடுத்துள்ளார். இந்த கொடூரம் நடந்த போது அமித் மற்றும் தீபக் இருவரும் உள்ளே இருந்துள்ளனர். காரில் இருந்த மற்றவர்கள், அப்பகுதியில் ரேஷன் கடை வைத்திருக்கும் உள்ளூர் பாஜக தலைவர் மனோஜ் மிட்டல், ஸ்பானிஷ் கலாச்சார மையத்தில் பணிபுரியும் கிரிஷன் மற்றும் சிகையலங்கார நிபுணர் மிதுன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமைச்சர் அமித் ஷா
இந்தச் சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்குத் தொடர்பு இருப்பதால் அவர்களை விடுவிக்க போலீசார் முயல்வதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து நேரடியாக உள் துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி ஷாலினி சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications