செல்வமகள் சேமிப்பு திட்டம் முதல் பிபிஎஃப் வரை! அக்டோபர் 1 முதல் டோட்டலாக மாற போகும் மாற்றங்கள்
டெல்லி: செப்டம்பர் மாதம் இன்னும் இரு தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெறும் என தெரிகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் முதல் செல்வமகள் சேமிப்பு கணக்கில் மாற்றங்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்படவுள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதம் முதல் திருத்தியமைக்கப்படும். அன்றைய தினம் காலை 6 மணி முதல் புதிய விலை அமலுக்கு வரும். வேறு என்னவெல்லாம் மாறுகிறது என்பதை பார்க்கலாம்.

நீங்கள் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருந்தீர்கள் என்றால் சில கிரெடிட் கார்டுகள் அவற்றின் லாயல்டி திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அது போல் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் (சுகன்யா சம்ரித்தி திட்டம்) மாற்றம் வருகிறது.
இந்த புதிய விதிகளின் கீழ் சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே முதல் நாள் முதல் இந்தக் கணக்குகளை இயக்கி வர வேண்டும். புதிய விதிமுறைகளின்படி, ஒரு பெண்ணின் எஸ்எஸ்ஒய் கணக்கை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரை தவி யேறு யாரேனும் திறந்திருந்தால் அந்த கணக்கை சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்ற வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும். அது போல் பிபிஎஃப் எனப்படும் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள் வருகின்றன. பல கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயது நிறைவடையும்வரை தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வட்டி கிடைக்காது.
அது போல் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஜி, 5 ஜி நெட்வொர்க்குகளின் தரத்தை மேம்படுத்த டிராய் சில மாற்றங்களை செய்யவுள்ளது. ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும்.
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். பங்குச் சந்தை போனஸ் கடன் தொடர்பான விதிகளை செபி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. செபி, பங்கு வரவுக்கான நேரத்தை 2 நாட்களாக குறைத்துள்ளது. அது போல் போனஸ் பங்குகள் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து இரு நாட்களுக்குள் வழங்கப்படும்.
வரும் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் உங்கள் வங்கிப் பணிகளை பாதிக்கும். செப்டம்பர் மாதம் முடிந்தவுடன் இந்த விதிகள் அக்டோபரில் அமலுக்கு வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications