“எனக்கு சவக்குழி தோண்ட எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன” - பிரதமர் மோடி பரபர பேச்சு!
டெல்லி: "சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்காக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்" என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மக்களவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மக்களவையில் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று உரையாற்றினார். அப்போது, "இன்று, உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளையும் நிலவரங்களையும் அரசியல் சார்பின்றி நாம் பகுப்பாய்வு செய்யும்போது, இந்தியாவின் மீது நாட்டம் அதிகரித்து வருவதை தெளிவாகக் காண முடிகிறது.
உலகின் நண்பனாகவும், உறவினராகவும் திகழ்வதோடு, இன்று இந்தியா பல நாடுகளுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக உருவெடுத்துள்ளது. இன்று தேசம் சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என்பதே யதார்த்தம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலை இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர்; நாட்டிற்கான அரசியலை செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் வளர்ச்சி பற்றி ஆழ்ந்த சிந்தனையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை. இந்தியாவின் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை.
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்காக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்" என ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications