கோட் சூட்டில் டென்ஷனான வைகோ.. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே சாடல்.. ‛‛ஏமாற்ற போறாங்க’’ என அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்துக்கு கோட் சூட் அணிந்து வைகோ வந்த நிலையில் பட்ஜெட் மூலம் இந்திய மக்களை மத்திய அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது எனக்கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு இன்று காலையில் நடந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

 They will try to hoodwink the people of India, says Vaiko before union Interim budget 2024

இதையடுத்து காலை 11 மணிக்கு லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருந்தது. தேர்தலில் மக்களை கவரும் வகையில் வரி குறைப்பு, மானிய திட்டங்கள் உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடுவாரா? என்ற எதிர்ப்பார்ப்புக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று காலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்துக்கு வந்தார். வழக்கமாக வேஷ்டி சட்டை, கருப்பு துண்டு அணிந்து வரும் வைகோ கோட் சூட் அணிந்து வந்திருந்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள் பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பினர். அதாவது ‛‛பட்ஜெட் குறித்து உங்களின் கமெண்ட் என்ன?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வைகோ, ‛‛பட்ஜெட் முதலில் தாக்கல் செய்யப்படட்டும்'' என்றார்.

அதன்பிறகு ‛‛பட்ஜெட்டில் உங்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛இந்திய மக்களை அவர்கள் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்'' என்றார். இதையடுத்து ‛‛உங்களின் மாநிலத்துக்காக ஏதாவது கோரிக்கையை வைக்கிறீர்களா?'' என்ற கேள்விக்கு, வைகோ, ‛‛ஆம், சிஏஏவுக்கு (குடியுரிமை திருத்த சட்டம்) நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தமிழ்நாடு வெள்ள பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிவாரண நிதியை வழங்க வேண்டும்'' என்றார். மேலும், ‛‛நீங்கள் பட்ஜெட்டை எதிர்க்கிறீர்களா?'' என கடைசி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛யெஸ்'' என பதிலளித்து சென்றார்.

அதேபோல், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவிக்கையில், ‛‛இந்த பட்ஜெட்டில் மத்திய பாஜக அளித்த வாக்குறுதிகளை நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். அதோடு நாட்டின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பாமல் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வலி, எம்எஸ்எம்இ (நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள்) துறையின் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் நண்பர்களாக உள்ள அதானி உள்ளிட்டோருக்கும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் உதவுவதற்கு பதில் இந்த முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பட்ஜெட் இருக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+