தமிழகம் வெடித்து கிளம்புவது இதற்குதான்! ராஜஸ்தானில் மும்மொழிக் கொள்கையின் பெயரால் பாஜக செய்த சேட்டை!
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையில் உருதுக்கு பதில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அம்மாநில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தானில் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் உருதுமொழி கற்பிக்கப்பட்டு வந்தது நீக்கப்பட்டு சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து காலந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு விடுதலை அடைந்த காலம் முதலே தமிழ்நாடு பல்வேறு கட்ட மொழிப் போர்களை நடத்தி இருக்கிறது. 1965-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான உச்சகட்ட தமிழ்நாட்டின் போர் தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தையே மாற்றி தேசிய கட்சிகளின் ஆட்சிக்கே முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த வரலாற்றை அறிந்தும் மத்திய அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை எப்படியாவது தமிழ்நாட்டில் திணித்துவிட துடியாய் துடிக்கிறது. மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சித்தும் வருகிறது; இதனை முன்வைத்து தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றன. சென்னையில் நேற்று திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தின.
தமிழ்நாட்டின் அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் 3-வது மொழியாக உருது மொழி கற்பிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் தற்போதைய பாஜக அரசோ, உருது மொழி கற்பிக்கப்படும் அரசு பள்ளிகளில் அம்மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதத்தை இடம் பெறச் செய்திருக்கிறது. இதனால் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் எந்த வகையிலும் பயன்படாத எந்த ஒரு வேலைவாய்ப்புக்குமே உதவாத சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்றாக வேண்டும் என்கிற நெருக்கடியையும் மாணவர்களுக்கு உருவாக்கி தந்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு. இதற்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications