கொடுக்குறதுல முதல் இடம்.. ஆனா தமிழகத்துக்கு திருப்பி தரலையே- நாடாளுமன்றத்தில் திருமா அட்டாக்
டெல்லி: மத்திய அரசுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் ஆனால் மத்திய அரசின் நிதி பகிர்வு பட்டியலில் தமிழ்நாடு கடைசியாக இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கான நிதி குறைப்பு, ரயில்வே திட்டங்கள் உட்பட பல விஷயங்களை தமிழக எம்பிக்கள் கேள்விகளாக எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் இரு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது,

வறுமை
"நாட்டில் வறுமை அதிகரித்திருக்கிறது, வேலையின்மை அதிகரித்திருக்கிறது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து ஏழை எளிய மக்களை கடுமையாக வதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். அரசின் தவறான பொருளாதார கொள்கைகளாலும் தவறான நிதி மேலாண்மையாலும் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலரோடு இந்திய ரூபாயை ஒப்பிடுகிற போது இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதலபாதாளத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதற்கு பாஜக தலைமையிலான இந்த அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதை முதலில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

புறக்கணிப்பு
இந்திய மாநிலங்களிலேயே இந்திய ஒன்றிய அரசுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கக்கூடிய ஒரு மாநிலமாக அதிக அளவில் நிதி வருவாய் வழங்குகிற மாநிலமாக இருக்கிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் தமிழ்நாடு மிகவும் குறைவான நிதியை தரக்கூடிய நிலையுள்ளது. திட்டமிட்டு வஞ்சிக்கிறதோ என்கிற அளவுக்கு ரயில்வே திட்டங்களாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது வஞ்சிக்கிறது.

எய்ம்ஸ்
மதுரையிலே எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்னும் வேலை தொடங்கப் பெறவில்லை என்பது உள்ளபடியே வெட்கக்கேடானது. பிரதமரால் தொடங்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட வேலை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது வெட்கக்கேடானதாகும். இந்திய அரசு இந்த விவகாரத்தில் எப்போது மதுரையில் எய்ம்ஸ் கல்வி நிறுவனம் கட்டுவதற்கான பணி தொடங்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மக்கள் தொகை
15வது நிதிக் குழு மாநிலங்களுக்கு எவ்வாறு நிதியை பகிர்வது என்பது குறித்து ஒரு வரையரையை தீர்மானித்து இருக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை அடிப்படையிலே நிதிபி பகிர்வு செய்வது என்னும் இந்த வரையறையால் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஏனெனில், தமிழ்நாடு தான் இந்திய ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஒப்பீட்டளவில் உத்தரபிரதேசத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் அங்கு மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.

கூடுதல் நிதி
ஆனால், இந்திய அரசாங்கத்தினுடைய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிகச் சரியாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான மாநிலம். அதனால் மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்த மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து ஒருவரையறையாக வைத்து நிதிப் பகிர்வு என்கிற நிலையை கையாள்வதால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. எனவே, அதிக நிதி வருவாயை வழங்குகிற தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குறைவான நிதி
டிபன்ஸ் காரிடாருக்கு (Defence Corridor) நிதி ஒதுக்கீடு செய்வதாக இந்திய ஒன்றிய அரசு உறுதியளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆவடியிலே டாங்கி தொழிற்சாலை இருக்கிறது. அதை விரிவுப்படுத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்திருக்கிற இந்திய ஒன்றிய அரசு இதுவரையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு மிகக்குறைவான முறையிலே அளித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நதிகள் இணைக்கப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

நதிகள் இணைப்பு
கோதாவரி பெண்ணாறு - காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். வறுமை ஒழிப்புத் திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் 4.6 கோடி பேர் வறுமையில் புதிதாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்று தெரிய வருகிறது.

சொத்து வரி
இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களில் 98 பணக்காரர்களின் சொத்து வரியில் 4% உயர்த்தினால் இந்தியா முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே, அவர்களுக்கான வெல்த் டேக்ஸ்-ஐ குறைக்காமல் அவர்களிடம் வரியை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். சென்னை மதுரைக்கு இடையே வந்தே பாரத் ரயிலை விட வேண்டும் என்கிற வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்" என்று பேசியுள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!












Click it and Unblock the Notifications