மைதேயி, குக்கி மக்கள் இனி சேர்ந்து வாழ்வது பெரிய கேள்விக்குறி. மணிப்பூர் சென்ற திருமாவளவன் பேட்டி!
டெல்லி: மெய்தி, குக்கி சமூக மக்கள் நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி கனியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான் என்று தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி, குக்கி சமூக மக்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களை வன்முறையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் அமளிக்கு காரணமானது. மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரில் அமைதி திரும்பவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் 'இந்தியா' கூட்டணி குழுவினர் 2 நாள் பயணமாக மணிப்பூருக்குச் சென்றனர்.

அங்கு, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினர். இதைத்தொடர்ந்து, மணிப்பூர் சென்ற 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று டெல்லி திரும்பினர். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகள் சார்பில் சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், "தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். தங்கள் வேதனைகளை கூறினார்கள். இந்த விவகாரத்தில் இரு தரப்பு மக்களும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
முகாம்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை, நல்ல உணவு இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். குக்கி சமூக மக்கள் மைதேயி சமூக மக்களோடு சேர்ந்து இனிமேல் தங்களால் வாழ இயலாது, ஏனெனில் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று தங்குவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற வருத்ததை பதிவு செய்தனர்.
அதேபோல் மைதேயி சமூக மக்கள் துச்சத்பூர் மாவட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம். மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்று தெரிவித்தனர். மணிப்பூர் ஆளுநரை சந்தித்தோம். மீண்டும் மணிப்பூரில் சுமூகமான வாழ்க்கை அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், "மணிப்பூர் சென்றபோது, ஒரு மாநிலத்திற்குள் உள்ள 2 நாடுகளுக்கு சென்று வந்த உணர்வு இருந்தது. மைதேயி, குக்கி சமூக மக்கள் நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்கான சூழல் கனியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்" என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications