நெய்வேலி என் தொகுதி.. என்எல்சியால் மக்கள் ஊரை விட்டே காலி செய்றாங்க! மக்களவையில் திருமாவளவன் வேதனை
டெல்லி: ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டே காலி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளதாக மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு என்எல்சி நிறுவனம் தோண்டி எடுத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து நேற்று நெய்வேலியில் என்.எல்.சி வளாகம் முன்பாக பாமக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தடியடி சம்பவங்கள் நடைபெற்றன. பாமகவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். இதனால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில், நேற்று மக்களவையில் பேசிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், "சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இயங்கி வரும் என்.எல்.சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் ஆண்டுக்கு ஆயிரம் கோடி இலாபத்தில் இயங்கி வருகிறது.
ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், குடியிருப்பை கொடுத்தவர்கள் இழப்பீடு கேட்டும், நிரந்தர வேலை கேட்டும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் சுரங்க பணிகளை மேலும் விரிவாக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முயன்று வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடிபெயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக இதனை காட்டுமன்னார்கோயில் வரை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தயாராக இல்லை. ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். வீட்டிற்கு 1 கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவணச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும் சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை அந்த பகுதியை சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும், ஆனால் இந்த சி.எஸ்.ஆர் நிதியை வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
மேலும் வட மாநிலங்களை சார்ந்தவர்கள் பெரும்பாலும் அங்கு பணியில் அமர்த்தபடுகிறார்கள். அதனையும் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சி.எஸ்.ஆர் நிதி அந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications