பிரதமர் கூறியபடி... நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான்... மக்களவையில் திருமாவளவன் பேச்சு!
டெல்லி: போராடும் விவசாயிகளை பிரதமர் அந்தோலன் ஜீவி என்கிறார். அவரது கூற்றுப்படி நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசினார்.
இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாக இருக்கிறது என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.
விவசாயிகளை வாட்டி வதைக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் .திருமாவளவன் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி உரை
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் டெல்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசியதோடு, இது போன்ற விவசாய சீரமைப்புகளைக் கொண்டு வர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான் முன்னோடி என்று மேற்கோள் காட்டி பேசியுள்ளார். மேலும் போராடும் விவசாயிகளை அந்தோலன் ஜீவி என்று கூறினார்

சர்ச்சை வார்த்தைக்கு கண்டனம்
இந்த வார்த்தையின் ஒற்றை வரி அர்த்தம் 'தொழில்முறை போராட்டக்காரர்கள்', அதாவது போராட்டத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் என்று பொருள். ஆனால் இதற்கு நீண்ட நெடிய விளக்கத்தையும் பிரதமரே அளித்தார். இந்த நிலையில் பிரதமர் பயன்படுத்திய இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் பேச்சு
இந்த நிலையில் இன்று மக்களவையில் குடியரசு தலைவரின் உரை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கூறியதாவது:- குடியரசுத்தலைவரின் உரை உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாக இருக்கிறது. விவசாய மக்களின் போராட்டம் இரண்டரை மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

நானும் அந்தோலன் ஜீவிதான்
போராடும் விவசாயிகளை பிரதமர் அந்தோலன் ஜீவி என்கிறார். அவரது கூற்றுப்படி நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான். போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பிரதமர் பேசிய பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications