பூமியிலிருந்து 25 கிமீ உயரத்தில் பலூனில் பறக்க ஆசையா? புக்கிங் முடிஞ்ச்.. 2025 வரை வெயிட் பண்ணுங்க!
டெல்லி: பூமிக்கு மேல் 25 கி.மீ. உயரத்தில் உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜெஃபால்டோ என்ற நிறுவனம் அடுத்தாண்டு இறுதியில் ஹீலியம் பலூன்களுடன் இணைக்கப்பட்ட கேப்சியூலில் சுற்றுலா பயணிகளை வானில் அனுப்பவுள்ளது. ஒன்றரை மணி நேரத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த கேப்சியூல், பின்னர் வானிலேயே மிதக்கலாம்.
சுமார் 3 மணி நேரம் வானில் மிதக்கலாம். அதில் பயணிப்பவர்கள் ருசியான பிரெஞ்ச் உணவுகளையும் மதுவையும் சுவைத்தபடி பூமியின் அழகை கண்டுகளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 6 பயணிகள் மற்றும் 2 விமானிகள் செல்லக் கூடிய அந்த கேப்சியூலில் ஒரு முறை பயணம் செய்ய ரூ 1 கோடியே 8 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அப்படி இருந்தும் 2024 ஆம் ஆண்டிற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. எனவே 2025 ஆம் ஆண்டு வானில் 25 கி.மீ. உயரத்தில் அமர்ந்து சாப்பிடும் அனுபவத்தை பெறலாம் என்கிறார்கள். இதற்காக நீங்கள் விண்வெளி வீரராக இருக்க வேண்டிய அவசியமோ இதற்கென பிரத்யேக பயிற்சியோ தேவையில்லை. ஆண்டுக்கு 60 விமானங்களை அனுப்ப பிரெஞ்ச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு விமானத்திலும் 6 பயணிகள் அமரலாம். உணவு மட்டுமல்ல மதுபானமும் பரிமாறப்படும். இதுகுறித்து பிரெஞ்ச் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் கூறுகையில் 25 கி.மீ, உயரத்தை நாங்கள் ஏன் தேர்வு செய்தோம் என்றால் அங்குதான் விண்ணில் இருளாக இருக்கும். உங்களுக்கு கீழ் 98 சதவீதம் வளிமண்டலம் இருக்கும் என்றார்.
மெக்லின் ஸ்டார் உணவு வழங்கப்படும். இந்த பலூனை பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஜோசப் டைராண்ட் வடிவமைத்துள்ளார். ஏதோ விண்ணுக்கு போய் சாப்பிடுகிறோம் என்பது பெரியவிஷயமல்ல. அந்த அனுபவமே நன்றாக இருக்கும். ஏற்கெனவே இந்த பலூன்களுடன் உயர பறந்து சோதனை ஓட்டம் நடந்துள்ளது. ஆனால் யாரும் 25 கிமீ. தூரத்தை அடைந்ததில்லை என்கிறார்கள்.

இந்த திட்டத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். 1 கோடி கொடுத்து கொஞ்ச தூரம் செல்வதற்கு பதிலாக நாங்கள் குவார்ட்டரை சாப்பிட்டுவிட்டு செவ்வாய் கிரகத்திற்கே செல்வோம் என்கிறார்கள். 1 கோடி கொடுத்து சாப்பாடா என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications