யம்மாடியோவ்.. 40 வீரர்கள்..முகேஷ் அம்பானியின் ஒரு நாள் பாதுகாப்புக்கு செலவு இவ்வளவா?
டெல்லி: இந்தியாவின் மிகவும் பிரபலமான பணக்காரரும், உலகின் தலைசிறந்த வணிகருமான முகேஷ் அம்பானியின் பாதுகாப்புக்கு தினசரியும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.
இந்திய மக்கள் தொகை எண்ணிக்கையில் சரி பாதிக்கும் அதிகமாக இருக்கும் சாமானிய மக்களின், ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட முகேஷ் அம்பானி என்கிற தனி நபரின் சொத்து மதிப்பு அதிகம். முகேஷ் அம்பானி இல்லையெனில் இன்று நாடு முழுவதும் மூலை முடுக்குக்கெல்லாம் பெட்ரோல், டீசல் சரியான நேரத்தில் சென்று சேர்ந்திருக்காது. நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக இருக்கும் நிலையில், வணிகத்திற்கு போக்குவரத்து அவசியம்.

இந்த வணிக போக்குவரத்திற்கு அடிப்படை தேவையாக இருக்கும் எரிபொருளை நாடு முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை முகேஷ் அம்பானியைதான் சேரும். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாக Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது இந்த பாதுகாப்பு Z பிளஸ் பாதுகாப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.
தேசிய அளவில், சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சஷாஸ்த்ர சீமா பால் (SSB) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG) போன்ற பாதுகாப்பு படைகள் விஐபிகளுக்கு பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. இதில் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைதான் அதிகமான விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
இதனையடுத்து சிஆர்பிஎஃப் இதிக அளவில் பாதுகாப்பு வழங்கி வருகிறது. முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தற்போது சிஆர்பிஎஃப்தான் 24*7 பாதுகாப்பை வழங்கி வருகிறது. சிஆர்பிஎஃப்-ல் 247 பட்டாலியன்கள் உள்ளன, அதில் ஆறு பட்டாலியன்கள் விஐபி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவர்களது பணி முழுக்க முழுக்க இந்த விஐபிகளை பாதுகாப்பதுதான். ஒரு பட்டாலியனில் சுமார் 30-40 வீரர்கள் வரை இருப்பார்கள்.
இந்த வீரர்கள் க்ளோக் பிஸ்டல்கள், MP5 சப்மஷைன் கன், INSAS ரைபிள் ஆகியவற்றை கொண்டிருப்பார்கள். இந்த ஆண்டு சிஆர்பிஎஃப்க்கு மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக விஐபிகளை பாதுகாக்க மட்டும் சுமார் ரூ. 772 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விஐபிஐ பாதுகாக்கவும் சராசரியாக மாதம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும் இந்த Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
முகேஷ் அம்பானியை பொறுத்த அளவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது வீட்டிற்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ கார் ஒன்ற நின்றிருந்தது. இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர் IB (Intelligence Bureau) ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், அம்பானியின் குடும்பத்தினருக்கு எதிராக அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தது. இதனையடுத்து Z பிரிவு பாதுகாப்பு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டது.
Z பிரிவு பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.15-20 லட்சம் வரை செலவாகும். இதுவே Z பிளஸ் பிரிவு பாதுகாப்புக்கு ரூ.40 லட்சம் வரை செலவாகும். இதற்கான செலவுகளை அம்பானி தரப்பு ஏற்றுக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications