அள்ள அள்ள யுரேனியம்! அதுவும் ஆப்பிரிக்காவில்? ஜி20யில் ஆப்பிரிக்காவை இணைத்ததற்கு இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருந்ததையடுத்து, கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதற்கு பின்னர் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் முதன் முறையாக ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

This is the reason why the African Union was included as a permanent member of the G20

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. உலகின் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகளாக உள்ள இந்த இரண்டு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது.

மற்றொருபுறம் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் நேற்றே இந்தியா வந்து சேர்ந்தனர். இந்நிலையில் இன்று காலை மாநாடு தொடங்கியபோது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க யூனியனை இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். இக்கோரிக்கையை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஆப்பிரிக்க யூனியன் ஜி20 நாடுகளின் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்பட்டது. முன்னதாக ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதியை பிரதமர் மோடி ஆரத் தழுவி மாநாட்டின் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

இவையெல்லாம் இன்று நடந்த சம்பவங்கள். ஜி20யில் இணைய பல்வேறு நாடுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஆப்பிரிக்க யூனியனை மட்டும் ஏன் இதில் உறுப்பினராக சேர்க்க ஜி20 முன்வந்தது? என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

அதாவது, புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இல்லாத இயற்கை வளங்களே கிடையாது எனலாம். குறிப்பாக இந்நாடுகளில் கிடைக்கும் யுரேனியம் உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காது. யுரேனியம் அணு குண்டு தயாரிக்க அடிப்படையாக அமைகிறது. அதேபோல மின்சார உற்பத்தியில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. அணு உலைகளில் எரிபொருளாக இந்த யுரேனியம்தான் பயன்படுகிறது. மற்ற நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தை விட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் யுரேனியம் அதிக நேரம் எரியும் தன்மை கொண்டது.

இப்படி ஏராளமான வளங்கள் இந்த நாடுகளில் கிடக்கின்றது. ஆனாலும் உலகின் மிகவும் ஏழ்மை நாடுகளின் பட்டியலில் இந்த நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன. எப்படி? இந்த வறுமைக்கு காரணம் பிரான்ஸும் அமெரிக்காவும்தான். தற்போது ஐரோப்பிய நாடுகளில் எரியும் மூன்று பல்புகளில் ஒரு பல்புக்கான மின்சாரம் இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் யுரேனியத்திலிருந்து கிடைக்கிறது. இப்படி யுரேனியம் தொடங்கி பல இயற்கை வளங்களை இந்த நாடுகள் சுரங்கம் மூலம் கொள்ளையடித்து சென்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதரவாக அந்நாட்டின் ஆட்சியாளர்கள் உடந்தையாக இருக்கிறார்கள்.

இந்த சூழலை கவனித்த புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் உள்ளிட்ட நாடுகளின் ராணுவம் அதிரடியாக களத்தில் இறங்கி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கைகூலியாக இருக்கும் ஆட்சியாளர்களை கைது செய்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த நாடுகளுடனான தங்களது ராஜ்ய உறவுகளை துண்டித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில்தான் கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்யா-ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மொத்தம் உள்ள 54 ஆப்பிரிக்க நாடுகளில் 49 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. அதில் அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக தாங்கள் ஓரணியில் திரள்வதாக ஆப்பிரிக்க நாடுகள் உறுதியேற்றுள்ளன. குறிப்பாக புர்கினோ பசோ இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்யா மற்றும் பிரிக்கிஸ் நாடுகளுடன் வணிகம் மேற்கொள்ளும்போது ஆப்பிரிக்கா தங்களது சொந்த நாணயத்தில் வணகம் மேற்கொள்ளலாம் என்பதுதான்.

இது காலங்காலமாக இருந்து வந்த டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாகும். இதையெல்லாம் கவனித்து வந்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், ஆப்பிரிக்க யூனியன் ஆகியவை புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் நாடுகளின் கிளர்ச்சி படையை தீவிரவாதிகள் என்று விமர்சித்துள்ளன. இதில் ஆப்பிரிக்க யூனியனின் நிர்வாகம் என்பது முழுக்க முழுக்க மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவேதான் இதை இப்படியே விட்டால் ரஷ்யா ஆப்பிரிக்க நாடுகளை தனக்கு சாதகமானதாக மாற்றிவிடும் என்று தற்போது மேற்கு நாடுகள் இதனை ஜி20 நாடுகளில் இணைத்துதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+