டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கொரோனா வைரஸ் வருகிறது".. முன் கூட்டியே 2013 இல் கணித்த மார்கோ அகார்டேஸ்.. ட்வீட் வைரல்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் வர போகிறது என 2013 ஆம் ஆண்டே மார்கோ அகார்டேஸ் என்பவர் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

Recommended Video

    Coronavirus வருகிறது.. 8 வருஷத்துக்கு முன்பே கணித்த இளைஞர்.. வைரலான Tweet

    கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவிவிட்டது.

    அதிகரிக்கும் கொரோனா.. மலேசியாவில் ஒரு மாதம் முழு லாக்டவுன்.. பிரதமர் அதிரடி அறிவிப்பு! அதிகரிக்கும் கொரோனா.. மலேசியாவில் ஒரு மாதம் முழு லாக்டவுன்.. பிரதமர் அதிரடி அறிவிப்பு!

    இந்த கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை என தனது உருவை மாற்றிக் கொண்டே வருகிறது. உலக நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு கேஸ்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    2020 -ஆம் ஆண்டு உலக நாடுகள் இந்த கொரோனாவால் பொருளாதாரத்தில் சரிவை சந்தித்தன. ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் ஓரளவு கொரோனா குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான நாடுகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

    மார்கோ ட்வீட்

    மார்கோ ட்வீட்

    இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸை 8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளார் ஒருவர். என்னதான் இது கேட்பதற்கு நம்பத்தகுந்ததாக இல்லாவிட்டாலும் இது உண்மைதான். இதற்கு ஆதாரங்களும் உள்ளன. ஆம் 2013-இல் மார்கோ அகார்டேஸ் என்பவரின் ட்வீட் வைரலாகி வருகிறது.

    சீனாவில் பரவல்

    சீனாவில் பரவல்

    அந்த ட்வீட்டில் கொரோனா வைரஸ் வருகிறது என ட்வீட் போட்டுள்ளார். இந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி இவரது கணிப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். 2019 ஆம் ஆண்டுதான் சீனாவில் பரவி 2020 ஆம் ஆண்டு உலகிற்கு தெரியவந்தது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    ஆனால் இவருக்கு எப்படி 2013 ஆம் ஆண்டே தெரியவந்தது. அதுவும் பொத்தாம் பொதுவாக வைரஸ் நோய் தாக்க போகிறது என போடாமல் சரியாக வைரஸின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதால் இந்த நபர் குறித்து அதிர்ச்சி கலந்து ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

    தெளிவு

    தெளிவு

    இது போல் வைரலாகும் இந்த ட்வீட்டிற்கு பலர் ஆச்சரியப்பட்டாலும் கொரோனா வைரஸ் என்பது காலம் காலமாக இருக்கிறது. அதன் உருவம் மாறி மாறி நம்மை தாக்கி வருகிறது. வவ்வால்களில் கொரோனா வைரஸ் இருப்பது 2013 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இந்த வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவும் என தெரியவில்லை என்றே ஜர்னல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே வவ்வால்களை சாப்பிட்டால் அதை சாப்பிடும் மனிதர்களுக்கும் வரும் என்பதை கூட மார்கோ அகாஸ்டே கூறியிருக்கலாம் என சில நெட்டிசன்கள் தெளிவுப்பட கூறுகிறார்கள்.

    English summary
    This Twitter handler had predicted coronavirus in 2013 itself as it was known to this globe in 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X