டிரைலரே இப்படி.. குடியரசு தின போராட்டம் எப்படி இருக்கும்.. மலைக்க வைத்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி
டெல்லி: ஆயிரக் கணக்கான டிராக்டர்களுடன் அணி வகுத்து மத்திய அரசுக்கு தங்கள் கோரிக்கையை ஆழமாக பதிவு செய்துள்ளனர் விவசாயிகள்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு அவர்களுடன் இன்று நடத்திய 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில்தான், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் நாளில் டெல்லியை நோக்கி மிகப்பெரிய டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு ஒத்திகை எடுப்பது போல நேற்று பேரணி நடத்தினர். ஆனால் அதுவுவே பெரும் பிரமாண்டமாக இருந்தது.
டிராக்டர் பேரணி சிங்கு, திக்ரி, ஷாஜகான்பூர், பல்வால் மற்றும் காசிப்பூர் வழியாக சென்றது. தஸ்னா, அலிகார் சாலை வரை சென்று பின்னர் காசிப்பூர் திரும்பியது.
3,500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகளுடன் இந்த அணிவகுப்பில் விவசாயிகள் பங்கேற்றதாக பாரதி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் தெரிவித்தார்.
சம்ப்லா டோலில் இருந்து அணிவகுப்புக்கு, நாங்கள் கொடியசைத்தபோது சுமார் 300 டிராக்டர்கள் இருந்தன. ஆனால் பிறகு பல ஆயிரம் டிராக்டர்கள் பங்கேற்றன என்கிறார் அவர்.
மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கையாகும், இது மூன்று சட்டங்கள் மற்றும் வரைவு மின்சார மசோதா திரும்பப் பெறப்படாவிட்டால், போராட்டம் தொடரும். இது ஒரு ஒத்திகை மட்டுமே, குடியரசு தினத்தில் நடக்கப்போவதை ஒப்பிடுகையில் இது சாதாரணம். டெல்லியில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற டிராக்டர் அணிவகுப்புகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம், என்று அவர் மேலும் கூறினார்.
இந்த டிராக்டர் அணி வகுப்பு ட்ரோன் கேமரா மூலம் காட்சியாக்கப்பட்டுள்ளது. அதை பார்க்க பெரும் பிரமாண்டமாக தெரிகிறது. எனவே குடியரசு தின விழா நாளில் நடக்கப்போகும் டிராக்டர் பேரணி இதை விட பல மடங்கு பெரிதாக இருக்கப்போவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications