நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
டெல்லி: இந்திய நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் திடீரென கடிதம் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 600 வழக்கறிஞர்களின் கடிதத்தை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி தந்துள்ளனர்.
இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உட்பட 600 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து இந்திய நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

600 வழக்கறிஞர்கள் கடிதம்: 600 வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசம் இப்போது தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கிறது. இத்தகைய தருணத்தில் சுயநலவாத கும்பல் ஒன்று இந்திய நீதித்துறைக்கு அழுத்தம் தருவதற்கும் இந்திய நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் தொடர்புடைய ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் தருவதற்கு இந்த சுயநலவாத கும்பல் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: இத்தகைய சுயநலவாதக் கும்பல்களின் அழுத்தங்களும் நெருக்கடிகளும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தலும் ஆபத்தானவையுமாகும். இத்தகைய நெருக்கடிகள், நீதிமன்றங்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும்.
தவறான கற்பிதங்கள்: இந்திய நீதித்துறையின் கடந்த காலங்கள்தான் பொற்காலம், சிறப்பான காலம் என்கிற தவறான கற்பிதத்தை இந்தக் கும்பல் உருவாக்க முயற்சிக்கிறது. தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகள் மீது தாக்கங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இத்தகைய கற்பிதங்களை பரப்புகின்றனர்.
வழக்கறிஞர்களின் சதி: பகல் நேரங்களில் அரசியல்வாதிகளை பாதுகாக்கிறவர்களாகவும் இரவு நேரங்களில் இந்திய நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவர்களாகவும் சில வழக்கறிஞர்கள் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இந்திய நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்த முடியும்; நெருக்கடி தர முடிந்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். இவை இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கக் கூடியவை. இந்திய நீதித்துறையின் செயல்பாடுகளை பாதிக்கக் கூடியவை. இத்தகைய அழுத்தங்களும் நெருக்கடிகளும் நீதித்துறையின் மீதான, நீதித்துறையின் கண்ணியத்தின் மீதான கடும் தாக்குதலாகும்.
மவுனம் கலையட்டும்: நமது நீதிமன்றங்களை சட்டத்தின் ஆட்சிக்கு தொடர்பே இல்லாத தேசங்களின் நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகின்றனர். இத்தகைய அரசியல், தொழில்துறை நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களில் இருந்து தேசத்தின் நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் நீதித்துறை அமைதியாகவோ, கடந்து செல்லவோ கூடாது. அப்படி செய்வதால் நெருக்கடி மற்றும் அழுத்தம் தரும் சக்திகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். ஆகையால் தாங்கள் கண்ணியமாக மவுனம் காக்கவும் கூடாது. இவ்வாறு 600 வழக்கறிஞர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி vs காங்கிரஸ்: இந்த கடிதத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். அதில், பிறரை துன்புறுத்துவதுதான் காங்கிரஸின் கலாசாரம்; 140 கோடி மக்களும் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமும் இல்லை என கடுமையாகவும் விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பதிலடியும் கொடுத்துள்ளனர்.
எதற்காக இந்த கடிதம்?: தேசிய அரசியலில் 600 வழக்கறிஞர்களின் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த வழக்கையும் குறிப்பிடாமல்தான் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த கடிதம் மிகவும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications