Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அந்த' இடத்தில் கலர் பவுடர் தடவிய சபலிஸ்ட்.. ஹோலியில் நடந்த ஷாக்கிங்.. இந்த வயசில் இவ்வளவு குரூரமா?

ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜாப்பான் இளம்பெண்ணிடம் அத்துமீறல் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹோலி கொண்டாட்டம் எனும் பெயரில் ஜப்பான் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் 3 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி மார்ச் 8ம் தேதியான மகளிர் தினத்தன்று தொடங்கியது. மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் கலர் பொடிகளை தூவியும், பூசியும் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆனால், இந்த பண்டிகையின்போது ஏராளமான பெண்கள் கொண்டாட்டம் என்கிற பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கலர் பவுடர்களை பூசுகிறோம் என்கிற பெயரில் பெண்களின் உடல் பாகங்களை தொடுவது போன்ற அநாகரிக செயல்கள் அரங்கேறியுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இந்நிலையில், டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் கடந்த 8ம் தேதி நடந்த ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது இந்த ஏரியாவில் இருந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவ்வழியாக வந்து செல்லும் பெண்கள் மீது கலர் பவுடரை தூவியுள்ளனர்.

 ஜப்பான் இளம்பெண்

ஜப்பான் இளம்பெண்

மட்டுமல்லாது கலர் பவுடரை தூவுவதைபோல அப்பெண்களின் உடல் அங்கங்களை தொட்டு அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த வழியாக ஜப்பான் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த இளைஞர்கள் இந்த இளம்பெண் மீதும் தங்களது குரூரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பெண்ணின் தலையில் முட்டையை உடைப்பதும், கழுத்து, இடுப்பு என பல அந்தரங்க இடங்களில் கலர் பவுடரை தடவியுள்ளனர். இந்நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அந்த பெண் அங்கிருந்து எப்படியாவது தப்பினால் போதும் என்று விலகி நடக்க முயன்றிருக்கிறார்.

 பாலியல் சீண்டல்

பாலியல் சீண்டல்

அப்போது மற்றொரு இளைஞர் அப்பெண்ணின் அந்தரங்க பகுதியில் கலர் பவுடரை பூசியுள்ளார். உடனே அப்பெண் அந்த இளைஞர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து கைகளை கொண்டு உடலை மறைத்தவாறு அப்பெண் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்ட நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விடியோ குறித்து விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு பரிந்துரைத்தது. இதனையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது

கைது

கைது

விசாரணையில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ குறித்து விசாரித்ததில் மூவர் அடையாளம் காணப்பட்டனர். இந்த மூவரும் சிறுவர்களாவார்கள். தற்போது இவர்களை நாங்கள் கைது செய்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர். மேலும், ஹோலி பண்டிகையின்போது அத்துமீறலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து புகார்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த கொண்டாட்டங்களின் போது புர்கா அணிந்து சென்ற இஸ்லாம் மத பெண்கள் அதிக அளவில் குறி வைக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 பலாத்காரம்

பலாத்காரம்

கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் பெண் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை உடனடியாக காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. நேற்றைய தினம் ஹோலி கொண்டாட்டத்தின் போது மேற்கு வங்கத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+