நடிகர் அஜித், அஸ்வின், செஃப் தாமு உட்பட பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்.. முழு பட்டியல் இதோ
டெல்லி: நமது நாட்டில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்ம விருதுகளைப் பெற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 28) 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படும். நாட்டிலேயே குடிமக்களுக்கு வழங்கும் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வழக்கமாகக் குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது ஜனவரி இறுதியில் யாருக்கு விருதுகள் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

பத்ம விருதுகள்
பிரதமர் அமைக்கும் பத்ம விருதுகள் குழு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பட்டியலைத் தயார் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும். அதன் அடிப்படையிலேயே பத்ம விருதுகள் வழங்கப்படும். வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பத்ம விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இதில் பத்ம விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
139 விருதுகள்
நடப்பு ஆண்டில் பத்ம விபூஷன் விருது 7 பேருக்கு அறிவிக்கப்பட்டன. 19 பேருக்குப் பத்ம பூஷன் விருது, 113 பேருக்குப் பத்மஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள் ஆவர். மேலும், இந்தப் பட்டியலில் வெளிநாட்டினர்/ வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் உள்ளனர்..
5 தமிழர்கள்
இன்றைய தினம் (ஏப்ரல் 28) 139 பேரில் 71 பேருக்குப் பதம் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் அஜித் குமார் (பத்ம பூஷன்), அஸ்வின் (பத்மஸ்ரீ), செஃப் தாமு (பத்மஸ்ரீ), லட்சுமிபதி ராமசுப்பையர் (பத்மஸ்ரீ), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (பத்மஸ்ரீ), சி.எஸ்.வைத்தியநாதன் (பத்மஸ்ரீ) ஆகிய ஐந்து தமிழர்கள் பத்ம விருதுகளைப் பெற்றனர். மற்றவர்களுக்கு மே 12ம் தேதி நடைபெறும் விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும்.
தமிழர்கள்
மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து 13 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்குப் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை சோபனா ஆகியோருக்கு கலைத் துறையில் சிறந்து விளங்குவதற்காகப் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல நல்லி குப்புசாமிக்கு தொழில்துறையில் சிறந்து விளங்கியதற்காகப் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications