Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய வருமான வரி சட்டத்தில் கண்டு கொள்ளப்படாத மூன்று முக்கியமான விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதித்துறையின் வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதாவை லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகம் செய்தார். இந்த சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அதேபோல் டிரஸ்ட் என்ற பெயரிலும், நன்கொடை என்ற பெயரிலும், விவசாய வருமானம் என்ற பெயரிலும் தப்பிப்பவர்கள் மீது புதிய சட்டத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிதித்துறையின் வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதாவை லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை அறிமுகம் செய்தார். அப்போது புதிய வருமான வரி மசோதாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள். தங்களது அதிருப்திக்குரிய அம்சங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.

Income Tax Nirmala Sitharaman

இதன் தொடர்ச்சியாக, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். இதையடுத்து கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி விவகாரங்கள் தொடர்பான கூட்டுக்குழு புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று நிதி விவாகரங்கள் தொடர்பான கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

இந்த புதிய வருமான வரி மசோதா (2025), இன்று வரை நடைமுறையில் உள்ள திருத்தப்பட்ட சட்டத்தின் மொழியை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், சாமானிய மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

1961ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வருமான வரி சட்டம் கடந்த 60 ஆண்டுகளில் பல திருத்தங்களைக் சந்தித்துள்ளது. வருமான வரிசட்டத்தை பொறுத்தவரை சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இல்லாமல், செக்சன்கள்,பிரிவுகள் என இதன் மொழிகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இதனால் வருமான வரி செலுத்துவோர் ஆடிட்டரின் துணை இல்லாமல் இதனை கையாள்வது சிரமமான காரியமாக உள்ளது. ஆனால் புதிய சட்டம் எளிதாக சாமானியர்களும் புரிந்து கொண்டு வரி கட்டிவிட முடியும்.

வரி நிர்வாகத்தினர், வரி நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கட்டுமானம் மற்றும் சிக்கல்கள் குறித்து கவலை எழுப்பி உள்ளனர். ஆகவே, எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான சுருக்கமான சட்டம் உருவாக்க, வருமானவரிச் சட்டம் 1961 முழுவதுமாக மீள்பார்வை செய்யப்படும் என்று ஜூலை 2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.


மதிப்பீடு ஆண்டு

நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகம் செய்துள்ள புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டிக்கிறது.இந்த மசோதாவில் முக்கியமான விஷயம் என்றால், மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல் புதிய வரிமுறையில் வரிக்கான ஆண்டே மதிப்பீடு ஆண்டாக இருக்கும்.


மாத சம்பளம் வாங்குவோர்

மாத சம்பளம் வாங்குவோர் சம்பளம் தொடர்பான அனைத்து விதிகளும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் புதிய சட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. எனவே வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது இனி தனித்தனி அத்தியாயங்களைப் பார்க்க வேண்டியதில்லை. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 இன் கீழ் முன்பு அனுமதிக்கப்பட்ட விலக்குகள் எல்லாம் இப்போது சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது கிராஜூவிட்டி (பணிக்கொடை), விடுமுறையை பணமாக்குதல், ஓய்வூதியக் குறைப்பு, VRS-க்கான இழப்பீடு மற்றும் பணிநீக்க இழப்பீடு போன்றவை இப்போது சம்பள அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.. HRA போன்ற சில அலவன்ஸ்கள் இப்போது புதிய மசோதாவின் அட்டவணை இரண்டில் பட்டியலிடப்பட்டுள்ளன, இதுவும் சம்பள விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பளம் வாங்குவோர் எளிதாக வரியை அணுக முடியும்.


வருமானவரி சட்ட வரிசைகள்

அட்டவணை II (16 வரிசைகள்) • விவசாய வருமானம் போன்ற விலக்கு அளிக்கப்பட்ட வருமானங்கள் வருகின்றன
அட்டவணை III (39 வரிசைகள்) • நிறுவனங்கள் மற்றும் HUF போன்ற கூட்டாளிகள் போன்ற சில வருமானங்களில் விலக்கு பெறத் தகுதியுள்ள சில நபர்கள் பற்றி உள்ளது.
அட்டவணை IV (14 வரிசைகள்) • குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்கு விலக்குகள்
அட்டவணை V (8 வரிசைகள்) • வணிக அறக்கட்டளைகள், இறையாண்மை செல்வ நிதிகள் போன்றவற்றுக்கான விலக்கு
அட்டவணை VI (12 வரிசைகள்) • IFSC அலகுகளுக்கான விலக்குகள்
அட்டவணை VII (48 வரிசைகள்) • வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள்

வரி விகிதங்களில் மாற்றங்கள்

விகிதங்கள் தொடர்பான மாற்றங்கள் எதுவும் இல்லை. 2025 நிதி மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, வருமான வரிச் சட்டம், 1961 இல் வழக்கமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால், இந்த சட்டம் கொள்கை ரீதியாக எளிதாக இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிதி மசோதா 2025 வரை முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களும் புதிய வருமான வரி மசோதா 2025 இல் முறையாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, மசோதாவில் கொள்கை தொடர்பான பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், மேற்கண்ட அம்சங்கள் ஏற்கனவே உள்ள சட்டத்தில் முன்மொழியப்பட்ட 'பொருள்' மாற்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது,


TDS மற்றும் TCS

குறிப்பிட்ட அட்டவணைகள் இடம் பெற்றுள்ளதன் மூலம் TDS மற்றும் TCS விதிகள் புரிந்து கொள்ள எளிதாகிவிட்டன. குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்கு பணம் செலுத்துவதற்கு தனித்தனி அட்டவணைகள் புதிய சட்டத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, வாடகைக்கு TDS தொடர்பான முன்மொழியப்பட்ட விதிகள் இருக்கும்.

இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்பான விதிகள்

இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்பான விதிகள், ஏற்கனவே உள்ள சட்டத்தின் பிரிவு 11, பிரிவு 12, பிரிவு 12A, பிரிவு 12AA, பிரிவு 12AB, பிரிவு 13, பிரிவு 115BBC, பிரிவு 115BBI, பிரிவு 115TD, பிரிவு 115TE, பிரிவு 115TF ஆகியவற்றில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்தன. ஒப்புதல் தொடர்பான விதிகள் பிரிவு 80G (5) இன் முதல் மற்றும் இரண்டாவது விதிமுறைகளின் கீழ் இருக்கின்றன. இவை அனைத்தும் எளிமைப்படுத்தப்பட்டு ஒரு அத்தியாயமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் புதிய மசோதாவில் "பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள்" என்ற தலைப்பில் XVII அத்தியாயத்தின் பகுதி B இல் இடம்பெற்றுள்ளன.

அரசு கண்டு கொள்ளாத மூன்று முக்கியமான விஷயங்கள்:

சம்பளம் வாங்குவோர் கழிவுகள் பெறுவதற்கான ஆயுள் காப்பீடு / மருத்துவ காப்பீடு தவணைத் தொகை, வீட்டுக் கடன் மீதான வட்டித் தொகை ஆகியவற்றுக்கு வரம்புகள் உள்ளன. ஆனால் அரசியல் கட்சிகள் உள்ளிட்டோருக்கு வழங்கும் நன்கொடை மீதான கழிவுகள் பற்றிய பிரிவுகான 136, 137இன் கீழ் அனுமதிக்கப்படும் கழிவுக்கு வரம்பு ஏதும் வைக்கவில்லை. அதேபோல் அறக்கட்டளை என்ற பெயரில் இன்று உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கோவில் , மசூதி, தேவாலயங்கள் பெயரில் டிரஸ்ட் நடத்தி, அதன் பெயரில் கல்வி மற்றும் மருத்துவமனை நடத்தி வருமானம் ஈட்டுவோருக்கு வரிகளை விதித்திருக்கலாம். அதையும்கண்டு கொள்ளவில்லை..

விவசாய வருமானம்

வருமான வரிவிலக்கு தொடர்வதை தடை செய்தால், அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கும். அதேபோல் விவசாய வருமான வரி விலக்கில் கொஞ்சம் கவனித்திருக்கலாம். விவசாய வருமானம் என்ற பெயரில் பலர் பொய்யாக கோடிகளில் விலக்கு பெறுகிறார்கள். எனவே வருமான வரி விலக்கு விவகராத்தில் விவசாயிகளுக்கும் வரம்புகளை நிர்ணயித்திருக்கலாம். 100 ரூபாய் அளவிற்கு கூட இப்போது மானியம் சிலிண்டருக்கு கிடைப்பது இல்லை ..இந்த மானியம் பெறுவதற்கோ ஆதாருடன் வங்கி கணக்கை இணைத்து, சிலிண்டர் கணக்கை இணைத்து முறைகேடு நடப்பதை தடுக்க முனைப்பு காட்டிய அரசு, டிரஸ்ட் என்ற பெயரிலும், நன்கொடை என்ற பெயரிலும், விவசாய வருமானம் என்ற பெயரிலும் தப்பிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+