பிரான்சில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகின்றன
டெல்லி: பிரான்சில் இருந்து மேலு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியாவுக்கு வருகின்றன.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக 2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்தம் ரூ59,000 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம்.

முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 28-ல் இந்தியா வந்து சேர்ந்தன. பின்னர் முறைப்படி இந்த விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி நாட்டின் விமானப் படையில் இணைக்கப்பட்டன.
லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடரும் நிலையில் அப்பகுதியில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் இருந்து இன்று காலை மேலும் 3 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து 8 மணிநேரம் தொடர்ந்து பயணித்து இந்தியாவுக்கு இந்த விமானங்கள் வருகை தருகின்றன. ஹரியானாவின் அம்பாலா விமான தளத்தை இன்று மாலை இந்த விமானங்கள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய 3 விமானங்களும் மேற்கு வங்க மாநிலம் ஹசிம்மரா விமான படைதளத்தில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications