ஜனவரி 1 முதல்.. இந்த 3 வகை வங்கி கணக்குகள் மூடப்படுமாம்.. ஜீரோ பேலன்சுமா? ரிசர்வ் வங்கி வைத்த செக்!
டெல்லி: புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், (ஜனவரி 1 2025) முதல் சில முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்ய உள்ளது. இந்த மாற்றத்தால் மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளன. செயலற்ற வங்கி கணக்கு, பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்கு, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என மூன்று வகையான அக்கவுண்டும் முடக்கப்பட உள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்கும் மூடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
வங்கி கணக்கு என்பது தற்போது அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அரசின் நிதி உதவி கூட பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் வங்கி கணக்கை கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். வங்கி விதிகளை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி அவ்வப்போது பாதுகாப்பு மற்றும் நிதி காரணங்களுக்காக விதிகளை மாற்றி வருகிறது.

அந்த வகையில், நாளை (ஜனவரி 1 2025) முதல் சில முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்ய உள்ளது. இந்த மாற்றத்தால் மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளன. எனவே உங்கள் வங்கி கணக்கும் மூடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
செயலற்ற வங்கி கணக்கு:
டார்மண்ட் அக்கவுண்ட் (Dormant Account)என்று சொல்லப்படக்கூடிய நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் அல்லது கடந்த 2 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் உங்களிடம் ஏதேனும் வங்கி கணக்கு இருந்தால் அது கிளோஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது. முறைகேடுகளை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்கு:
இன்ஆக்டிவ் வங்கி கணக்கு (Inactive Account) எனப்படும் செயல்பாடற்ற வங்கி கணக்கு என்பது 12 மாதங்களாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்கை குறிக்கும். இத்தகைய வங்கி கணக்குகளும் மூடப்பட உள்ளன. வங்கிகளின் நிதி பாதுகாப்பு, முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்க உள்ளது. எனவே நீங்கள் வைத்து இருக்கும் வங்கி கணக்கு இந்த கேட்டகிரியில் வந்தால் உடனே அதை ரி ஆக்டிவிவேட் செய்து விடுங்கள் அல்லது மூடப்படும் ரிஸ்க் உள்ளது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்:
வங்கியில் எந்த தொகையும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு மெயிண்டன் செய்வது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு எந்த தொகையும் டெபாசிட் செய்யாமல் இருப்பதோடு, வங்கி கணக்கில் இருப்பு தொகை ஜீரோவாக இருக்கும் கணக்கே ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் எனப்படுகிறது. இந்த வகை வங்கி கணக்குகளில் எந்த வித பரிவர்த்தனையும் குறிப்பிட்ட காலத்திற்கு இல்லையென்றால் முடக்கப்படலாம். ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்களில் முறைகேடு செய்யப்படுவதை தடுக்கவும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் வங்கி கணக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தால் உடனடியாக அதை ரீ ஆக்டிவேட் செய்யவும். இதற்கான முதல் படி, கே ஒய் சி நடைமுறையை மேற்கொள்வதுதான். உங்கள் வங்கி கிளைக்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைனிலோ இதை செய்யலாம். உங்கள் வங்கி கணக்கு செயலற்று இல்லை என்பதை உறுதி செய்ய அவ்வப்போது கேஒய்சி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
-
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications