இந்தியாவில் டிக்டாக் மீதான தடை நீக்கம்? டெல்லியில் வேலைக்கு ஆட்களை எடுக்க அறிவிப்பு வெளியானது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதை மத்திய அரசு சமீபத்தில்தான் மீண்டும் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் டிக்டாக் இந்தியா நிறுவனம் டெல்லி குர்கானில் உள்ள தங்கள் அலுவலகத்தில் பணியாளர்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளது.

குர்கான் அலுவலகத்தில் Trust and Safety துறைக்கு வங்காள மொழி பேசும் கன்டென்ட் மதிப்பீட்டாளர், நலன்சார் கூட்டாண்மை மற்றும் செயல்பாட்டுத் தலைவர் என இரண்டு பதவிகளுக்கு ஆட்கள் தேவை என டிக்டாக் இந்தியா லிங்க்ட்இன் தளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

TikTok jobs job

அமெரிக்க வரி காரணமாக, சீனாவுடன் இந்தியா நல்ல ரேப்போவை மெயின்டெயின் செய்து வருகிறது. போகிற போக்கை பார்த்தால் டிக்டாக் உட்பட சீன செயலிகள் மீது உள்ள தடையை மத்திய அரசு நீக்கிவிட கூட வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிபட்டன. அதை உறுதி செய்யும் வகையில், சில வாரங்களுக்கு முன்பு டிக்டாக் இந்தியாவின் இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அப்படியெனில் மத்திய அரசு டிக்டாக் மீதான தடையை நீக்கியிருக்கிறதா? என்று கேள்விகள் எழுந்தன. மறுபுறம் டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்றும் தகவல்கள் பரவின.

இப்படியான குழப்பங்கள் இருந்த நிலையில், "டிக்டாக் தடை நீக்கத்திற்கான எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் கிடைக்கிறது என்று பரவும் செய்தி தவறானது" என அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தின. இப்படி இருக்கையில்தான் ஆட்களை எடுக்க டிக்டாக் இந்தியா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2020ல் லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டன. இதனையடுத்து சீனாவை சேர்ந்த 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதில் டிக்டாக்கும் ஒன்று. அதற்கு முன்னர் சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலி உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது அமெரிக்காவின் 50% வரி காரணமாக இந்தியா தனது வணிகத்தை பிரிக்ஸ் நாடுகள் பக்கம் திருப்பியிருக்கிறது. குறிப்பாக சீனாவுடன் வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. சீனாவும் நம்மிடம் நல்ல முறையில் வர்த்தக உறவை வைத்திருப்பதால் விரைவில் டிக்டாக் உட்பட பல செயலிகள் மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+