Timeline: ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து செல்லும்- உச்சநீதிமன்றத்தில் இதுவரை நடந்தது என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டை குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் 1950களில் இருந்தே இந்த 370-வது பிரிவுக்கு எதிரான குரல்களும் ஒலித்து வந்தன.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய பாஜக அரசால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் முற்றாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்தனர். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்தனர். 370-வது பிரிவு ரத்துக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை செல்லும் என அதிரடி தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 28: 370-வது பிரிவுக்கு எதிரான வழக்குகளை முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு பரிந்துரைத்தது.
2019-ம் ஆண்டு அக்டோபர் 1: 370-வது பிரிவை விசாரிக்க நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்கே கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ஜூலை 3: தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
2023-ம் ஆண்டு ஜூலை 11: 370-வது பிரிவுக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதான விசாரணையும் ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் தொடங்கும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது.
2023-ம் ஆண்டு ஆகஸ் 2 : 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
2023-ம் ஆண்டு செப்டம்பர் 5: மொத்தம் 16 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு டிசம்பர் 8: 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
2023 டிசம்பர் 11: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததும் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் தெரிவித்தது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications