நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம்.. மன்னர் ஆட்சி அடையாளமே செங்கோல்- மஹூவா மொய்த்ரா சரவெடி பேச்சு!
டெல்லி: நெருப்பாற்றில் நீந்திதான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம்; மைனாரிட்டி பாஜக அரசால் எதிர்க்கட்சிகளை எதுவுமே செய்ய முடியாது; மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் செங்கோலுடன் ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார் என லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆவேசமாக பேசினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் மஹூவா மொய்த்ரா எம்பி பேசியதாவது: லோக்சபாவில் இதே இடத்தில் நான் நின்றபோது எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு எம்பியின் குரல்வளையை நெறித்ததால் ஆளும் பாஜக பெரும் விலை கொடுத்துவிட்டது. என்னை ஒடுக்க நீங்கள் நினைத்தீர்கள்.. ஆனால் மக்கள் உங்களது 63 நாடாளுமன்ற மக்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை உணரவே இல்லை. எங்களை- எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.
செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் செங்கோலுடன் ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார். இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் செங்கோல் என்பது எதற்காக? கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்ப்டுவர் என்பதை பாஜகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
#WATCH | TMC MP Mahua Moitra says, "The last time I stood here I was not allowed to speak. But the ruling party has paid a very heavy price for throttling the voice of one MP. In an attempt to suppress me, the public made 63 of your members sit permanently..." pic.twitter.com/JXyBSqM2ta
— ANI (@ANI) July 1, 2024
மணிப்பூர் மாநில மக்கள் கிழக்கை பாருங்கள் என கேட்கவில்லை. கிழக்கில் அரசாங்கம் என்பது செயல்பட்டாக வேண்டும் என்றுதான் மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பதாக ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே? ஏன்? இவ்வாறு மஹூவா மொய்த்ரா எம்பி பேசினார்.












Click it and Unblock the Notifications