என்னையும் விசாரித்தே தீர்ப்பளிக்க வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகர் தனபால் கேவியட் மனு!
Recommended Video

டெல்லி : தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தன்னையும் விசாரித்தே இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் கேவியட் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்க மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் சபாநாயகர் தனபால் அளித்த தகுதி நீக்கம் செல்லும் என்றும் அறிவித்தார். மேலும் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இருந்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயார் என்று அறிவித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்வந்தால் தம்மையும் விசாரித்து தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications