நெருக்கடி! இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நாங்க உதவுவோம்.. அனுமதி தாங்க! பிரதமரிடம் கேட்ட முதல்வர்
டெல்லி: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்று இருக்கிறார். டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடக்க உள்ளது. திமுக சார்பாக திறக்கப்படும் இந்த கட்டிட விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலின் மோடி
இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் 14 கோரிக்கைகளை வைத்தார். இதில் இலங்கை பொருளாதார பிரச்சனை, அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனை பற்றி பேசினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

ஸ்டாலின் கோரிக்கை
இதனால் இலங்கையில் இருந்து அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட 16 தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நிலை காரணமாக அவர்கள் தமிழ்நாடு வந்தனர். அங்கு உணவு கூட வாங்க முடியாத நிலை அவர்களுக்கு நிலவுகிறது. இவர்கள் கடல்வழியாக மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தற்காலிக இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதாரம்
இன்னும் பலர் இதேபோல் தமிழ்நாட்டிற்கு வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. வடக்கு இலங்கையில் இருக்கும் தமிழர்கள், கொழும்பில் இருக்கும் தமிழர்கள், மலையக தமிழர்கள் ஆகியோருக்கு நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை தமிழர்கள்
அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவுகள், மருந்துகளை அனுப்ப நாங்கள் தயார். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இன்னொரு நாட்டு மக்களுக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை அனுமதி வேண்டும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் இந்த கோரிக்கையை வைத்தார். முன்னதாக துபாயில் பேசிய முதல்வர்.. தமிழர்கள் எங்கே இருந்தாலும்.. உக்ரைனில் இருந்தாலும், துபாயில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

கச்ச தீவு
மேலும் இந்த சந்திப்பில் கச்சத்தீவு பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது. அங்கு தமிழ்நாடு மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications