ஆளுநரிடம் கெஞ்சிக்கிட்டு இருக்கோம்.. "கிடப்பில் 3 முக்கிய கோப்புகள்”! உச்சநீதிமன்றத்தில் அரசு வாதம்
டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்யும் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். "டிஎன்பிஎஸ்சி பணி நியமனங்கள், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒப்புதல்கோரும் கோப்பு, ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் கோப்புகளை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார்." என்று தெரிவித்தனர்.
வழக்கறிஞர் வில்சன், "ஆளுநர் ரவி மக்களின் பொது சுகாதார திட்டம் தொடங்கி உயர் கல்வி விவகாரம் வரை எந்த விதமான கோப்புகள் மற்றும் மசோதாக்களுக்கு பதில் அளிக்கவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 14 இடங்களில் தலைவர் உள்ளிட்ட 10 பதவிகள் காலியாக இருக்கின்றன. பல முறை கோரிக்கை விடுத்த பிறகு ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு இருக்கிறார்" என்று கவலை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவிக்கையில், "2020 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி இப்போது வரை, அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் ஆளுநரிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக சில கோப்புகளில் கையெழுத்திட வேண்டியும் வலியுறுத்தி வருகிறோம். நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகளின் தண்டனையை குறைக்க பரிந்துரைக்க வேண்டி வருகிறோம். ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை" என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications